Venezuela Quits Norway Embassy after Opposition Leader María Corina Machado Wins Nobel Peace Prize 2025 
உலகம்

கொரினாவுக்கு நோபல் பரிசு : நார்வே தூதரகத்தை மூடிய வெனிசுலா

Venezuela Quits Norway Embassy after Opposition Leader Wins Nobel Peace Prize : கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்ததால், கோபமடைந்துள்ள வெனிசுலா, நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடி இருக்கிறது.

Kannan

நோபல் பரிசு வென்ற கொரினா :

Venezuela Quits Norway Embassy after Opposition Leader Wins Nobel Peace Prize 2025 : இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படுகிறது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடியதற்காக உலகின் மிக உயரிய விருது அவருக்கு கிடைத்து இருக்கிறது. உலகம் முழுக்க சர்வாதிகாரம் என்ற இருள் விலகி வரும் சூழலில், ஜனநாயகம் தழைக்க போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதே சிறப்பு என்று நோபல் பரிசுக் குழுவும் பாராட்டி இருந்தது.

வெனிசுலா அரசு ஆவேசம்

வெனிசுலாவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்து ராணுவ அரசை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார் கொரினா. அவருக்கு இப்போது உலக அளவில் கிடைத்து இருக்கும் அங்கீகாரம் ராணுவ அரசை எரிச்சல் அடைய வைத்து இருக்கிறது.

நார்வை தூதரகத்தை மூடிய வெனிசுலா

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நார்வையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது. உண்மையான காரணம் எதையும் தெரிவிக்காமல் கராகஸ் ஒஸ்லோவில் உள்ள தூதரகத்தை வெனிசுலா அரசு மூடிவிட்டதை, நார்வேயின் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

மேலும் படிக்க : "தனிமனித சாதனையல்ல, சமூகத்தின் வெற்றி“ : மரியா கொரினா பெருமிதம்

நார்வே அரசு வருத்தம்

எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், வெனிசுலாவுடன் தொடர்ந்து உறவை விரும்புகிறோம் என்று நார்வே வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நார்வேயை தொடர்ந்து, ஆஸ்திரேலிய தூதரகத்தையும் மூட வெனிசுலா அரசு முடிவு செய்துள்ளது.

========