World's First AI Bot Minister Diella Appointed By Albanian Prime Minister Edi Rama in Tamil 
உலகம்

”ஊழலுக்கு 100% முற்றுப்புள்ளி” : அல்பேனியாவில் ’AI’ அமைச்சர்

Albania First AI Bot Minister Diella Against Corruption : ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலகிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு டியெல்லா ‘ஏஐ’ அமைச்சரை அல்பேனியா அறிமுகப்படுத்தி அசத்தி இருக்கிறது

Kannan

மனிதர்களை ஆளும் செயற்கை நுண்ணறிவு :

Albania First AI Bot Minister Diella Against Corruption : மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு எனப்படும் ‘ஏஐ’ ( Artificial intelligence ) மனிதர்களின் வேலைகளை செய்யத் தொடங்கி, அவர்களுக்கான வாய்ப்புகளை பறித்து வருகிறது. வருங்காலத்தில் மனிதனுக்கு மனிதனை தேவையில்லை என்ற நிலையை செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு உலகை ஆளத் தொடங்கி விட்டது ‘ஏஐ’ தொழில்நுட்பம்.

உலகம் முழுவதும் ஊழல், முறைகேடு :

உலகம் முழுவதும் அரசுகளின் கையில் ஆட்சி இருந்தாலும், ஊழல், முறைகேடுகள் எப்போதும் போல நடந்தேறி வருகின்றன. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவது என்பது பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்ளது. அந்ததந்த நாட்டு சட்ட திட்டங்களின் கடுமைக்கு ஏற்ப இவை மாறுபடுகிறதே தவிர. ஊழலே இல்லாத நாடு என்றும் கிடையாது.

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் :

World's First AI Minister Diella in Albania : உலகில் ஊழலை ஒழித்து விட முடியுமா என்ற நீண்ட கால கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், பிரச்சினைக்கு கை கொடுத்து இருக்கிற ஏஐ தொழில்நுட்பம். அந்த வகையில், உலகின் முதல் ஏஐ அமைச்சர் டியெல்லா-வை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஏஐ அமைச்சர் டியெல்லா :

‘டியெல்லா’ ( AI Minister Diella ) (அல்பேனிய மொழியில் சூரியன்) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏஐ பாட்(AI Bot), நாட்டின் பொது டெண்டர் நடைமுறைகளை மேற்பார்வையிட்டு, ஊழலைத் தடுக்கும் பணிகளில் ஈடுபடும்.

100% ஊழலுக்கு முற்றுப்புள்ளி :

உலக அரசியலில் திருப்பு முனையாகக் கருதப்படும் ஏஐ அமைச்சர் தொடர்பான அறிவிப்பை அல்பேனிய பிரதமர் எடி ராமா ( Albanian Prime Minister Edi Rama ) வெளியிட்டார். டெண்டர் முடிவெடுப்பதில் தொடங்கி, பல்வேறு பணிகளை ஏஐ அமைச்சர் நிர்வகிக்கும். இதன்மூலம் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை முழுமையாக ஒழிக்க முடியும் என அல்பேனியா அரசு தெரிவித்துள்ளது நம்புகிறது. பாரம்பரிய அல்பேனிய உடை அணிந்த டிஜிட்டல் அவதாரமாக ‘டியெல்லா’ உருவாக்கப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெண்டர் முடிவுகள் ஏஐ அமைச்சர் கையில் :

தனியாருக்கு விடப்படும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் அமைச்சர் டியெல்லா(AI Minister Diella) கண்காணிக்கும். அமைச்சரவையில் இடம்பெறா விட்டாலும், அல்பேனியாவில் இனி ஒப்பந்தங்கள் தொடர்பான இறுதி முடிவை தீர்மானிக்கும் அதிகாரம் டியெல்லா பிடியில் தான் இருக்கும்.

மேலும் படிக்க : திருமலையில் ’AI தொழில்நுட்பம்’ : 2 மணி நேரத்தில் பெருமாள் தரிசனம்

செயற்கை நுண்ணறிவு அமைச்சர் அறிமுகம் நல்ல முயற்சிதான் என்றாலும், இதை சரியாக கையாளா விட்டால், அரசு நிர்வாகத்தில் பெரிய குளறுபடிகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள்.

=============