
திருப்பதி ஏழுமலையான் கோவில் :
AI Technology in Tirupati Tirumala Temple Darshan : உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். விழாக் காலங்கள் என்றால் பக்தர்கள் வருவது சில லட்சங்களை தாண்டுகிறது. அப்போது எல்லாம் பெருமாளை சேவிக்க 48 மணி நேரம் கூட ஆகும். சிரமங்களை தவிர்க்க திருப்பதி தேவஸ்தானம்(TTD) சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், வருகை அதிகரிப்பால் நேர விரயத்தை தவிர்க்கவே முடிவதில்லை.
வெளிப்படையாக டெண்டர்கள் :
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு(TTD Chairman BR Naidu), “ முதல்வர் சந்திரபாபு நாயுடு(CM N. Chandrababu Naidu) ஆலோசனைப்படி, கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் நித்ய அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக திருப்பதி தேவஸ்தானம் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த ஆட்சியில் திருமலையில் ஒய்எஸ்ஆர் கட்சிக்காரர்கள் 12 பேருக்கு ஓட்டல்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, இ-டெண்டர் மூலம் ஓட்டல்களை ஒதுக்கி உள்ளோம்.
ஏஐ தொழில்நுட்பம், விரைவாக தரிசனம் :
ஸ்ரீவாணி அறக்கட்டளை(Srivani Trust) தரிசன நேரத்தை மாற்றி உள்ளோம். காலையில் டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு அன்று மாலை சுவாமி தரிசனம் கிடைத்து விடும். ஏழுமலையானை பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம்(AI Technology in Tirupati) பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஏழுமலையானை 1 முதல் 2 மணி நேரத்துக்குள் பக்தர்கள் தரிசனம்(Tirupati Darshan Time) செய்யலாம். இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க : திருமலைக்கு போக "Fastag கட்டாயம்‘ : ஆகஸ்டு 15 முதல் அமல்
ஏழுமலையான் தரிசனம், பிரசாத விற்பனை தொடர்பாக சைபர் குற்றங்கள் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இவற்றை முழுமையாக தடுக்கும் வகையில், திருமலையில் சைபர் செக்யூரிட்டி லேப் தொடங்கப்படும்,” இவ்வாறு பி.ஆர்.நாயுடு கூறினார்.
====