World's Oldest President Paul Biya in Cameroon At Age 92 Image Courtesy : Paul Biya President Of Cameroon Photo In Public Press Meet
உலகம்

கேமரூன் : 7முறை ஜனாதிபதி, 92 வயதிலும் அதிபர் : சாதித்த பால் பியா

World's Oldest President Paul Biya in Cameroon At Age 92 : கேமரூனில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 7வது முறை வெற்றி பெற்ற பால் பியா 92 வயதில் அதிபராகி சாதனை படைத்துள்ளார்.

Kannan

உலகின் வயதான அதிபர்

World's Oldest President Paul Biya in Cameroon At Age 92 : உலகின் மிக வயதான அரச தலைவர் என்ற பெருமையை பியா பெற்றுள்ளார் பால் பியா. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூரின் 1982ம் ஆண்டு அதிபராக இவர் இருந்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் பால் பியா போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இசா சிரோமா, தேர்தலில் குளறுபடிகள் ஏற்பட்டதால், தானே வெற்றி பெற்றதாக அறிவித்தார். ஆனால் இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 53.66 சதவீத வாக்குகளை பெற்ற பால் பியா வெற்றி பெற்றதாக(Paul Piya President Of Cameroon) அறிவித்தது. தோல்வியுற்ற சிரோமாவுக்கு 35.19 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்ததாக கூறியது.

92 வயதில் அதிபரான பால் பியா :

இதைத்தொடர்ந்து 7வது முறையாக கேமரூன் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். பால் பியா. 92 வயதாகும்(Paul Biya Age 2025) இவர் 7 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார். அப்படி என்றால் 100 வயதில் அதிபர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். இதுவரை யாரும் 92 வயதில் ஒருநாட்டின் தலைமை பதவியை வகித்தது இல்லை என்பதால், தற்போதும் பால் பியா சாதனையாளராக கருதப்படுகிறார்.

மேலும் படிக்க : டிரம்பை பாராட்டிய பில் கிளிண்டன் - டோனால்ட் டிரம்ப் அளித்த பதில்?

பால் பியா அதிபராவதற்கு 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களிடம் கடும் எதிர்ப்பு உள்ளது. எனவே, 7 ஆண்டுகாலம் அதிபராக பால் பியா தொடர்வது தினமும் சவாலாகவே இருக்கும்.

ஆப்பிரிக்க நாடான கேமரூ்ன், 3 கோடி மக்கள் தொகையை கொண்டது. ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக கேமரூன் இருக்கிறது.

========