

மார்கழி மாதம்
தற்போது கார்த்திகை மாதம் நடந்து வருகிறது. அடுத்து வர இருப்பது மார்கழி. இந்த மாதத்தில் யாரும் திருமணங்களை செய்ய மாட்டார்கள்.
இந்த மாதத்தில் சுபமுகூர்த்த நாள்களும் இல்லை என்பதால், அதற்கு முன்னதாக கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அடுத்தடுத்த முகூர்த்தங்களில் திருமணங்களை நடத்த பொதுமக்கள் மும்முரம் காட்டி வர்றாங்க.
முகூர்த்த நாட்கள் - களைகட்டும் சந்தை
இந்த நிலையில், நாளை முதல் அடுத்த 25 நாள்களில் உணவு, நகை, ஜவுளி, விருந்தோம்பல், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பெருமளவிலான வணிகங்கள் நடைபெறும் என்று அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அப்படி பார்த்தா தினசரி சராசரியா 2 லட்சம் கட்டிமேள சத்தங்கள் கேட்க போகுது
டெல்லியில் மட்டும் 5 லட்சம் கெட்டிமேளம்
டல்லி மற்றும் என்.சி.ஆர். பகுதிகளில் மட்டும் சுமார் 5 லட்சம் திருமணங்களும், ரூ. 2.5 லட்சம் கோடி மதிப்பிலான வணிகங்களும் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
25 மாநிலங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் மற்றும் 550 வணிகச் சங்கங்களுடனான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தத் தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ.7.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
ஒட்டுமொத்த வணிகத்தில் சில்லறை விற்பனை மூலமாக மட்டும் ரூ. 4.05 லட்சம் கோடி வர்த்தகமாகும் என்றும், மீதமுள்ள 3.45 லட்சம் கோடி சேவைத் துறை மூலமாகமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
52 லட்சம் திருமணங்களுக்கு ஆகும் செலவு தோராயமாக :
* நகை மற்றும் ஆபரணங்கள் - ரூ. 1.2 லட்சம் கோடி
* ஜவுளி - ரூ. 90,000 கோடி
* பரிசுகள், திருமண உபகரணங்கள், மளிகைப் பொருள்கள் - ரூ. 37,500 கோடி
* உலர் பழங்கள், இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருள்கள் - ரூ. 30,000 கோடி
* கேட்டரிங் மற்றும் சேவைகள் துறை - ரூ. 75,000 கோடி
* ஹோட்டல்கள் மற்றும் மண்டபங்கள் - ரூ. 60,000 கோடி
* அலங்காரம், நிகழ்வு மேலாண்மை (ஈவென்ட் மேனேஜ்மென்ட்) - ரூ. 37,500 கோடி
* போக்குவரத்து, இசை மற்றும் பொழுதுபோக்கு - ரூ. 30,000 கோடி
* புகைப்படம், காணொலிப் பதிவு, அழகு நிலையச் சேவைகள் - ரூ. 22,500 கோடி
உருவாகும் 1.25 கோடி வேலைவாய்ப்பு
இந்த அளவுக்கு திருமணங்கள் நடப்பதால், சுமார் 1.25 கோடி தற்காலிக மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று CAIT அறிக்கை சொல்லுது.
==================