
இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் தலையீடு மற்றும் தாக்குதல் புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரான் மிரட்டி இருப்பது பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ஈரான், போரை தொடர்ந்து, உற்பத்தியை நிறுத்தி இருக்கிறது.
அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இதனால், கச்சா எண்ணெய்யை கொண்டு கடுமையாக பாதிக்கப்பட்டு, வரும் நாட்களில் விலை ஏற்றம் அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
போர் தொடங்கியதில் இருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஐந்து மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 78.93 டாலராக இருந்தது.
அதேபோல அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 1.89 டாலர் 2.56% உயர்ந்து 75.73 டாலராக இருந்தது.
இதுபற்றி கவலை தெரிவித்துள்ள பொருளாதார நிபுணர்கள், ஹார்மூஸ் நீரினை மூடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை 118 டாலர் வரை உயரும் என்று எச்சரித்துள்ளனர்.
இதனால், எரிபொருள் விலையும் கடுமையாக உயர்ந்து, சாமான்ய மக்களை பாதிக்கும்.
====