

ஈரானின் அணுசக்தி நிலையங்கள், ராணுவ அலுவலகங்கள், யுரேனியம் சேமிப்பு கிடங்குகள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் முக்கிய நகரங்கள் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றனது.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
12 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்து, ஒரு பேரல் 78 டாலருக்கு விற்கப்படுகிறது.
இந்த விலை மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
உலகின் மூன்றாவது எண்ணெய் உற்பத்தியாளராக ஈரான் உள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் ஈரானில் எண்ணெய் உற்பத்தியை பாதித்துள்ளது.
மேலும் அங்கிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதும் தடைபடும் என்பதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க முடியாது எனக் கூறப்படுகிறது.
இதன் தாக்கம் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்படும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து, சாமான்ய மக்களை பெரிதும் பாதிக்கும்.
====