54 லட்சம் கோடி சொத்து, உலகின் முதல் பணக்காரர் : எலான் மஸ்க் சாதனை

Elon Musk Net Worth 2025 : ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரிப்பால், உலகில் 600 பில்லியன் டாலர் சொத்து வைத்து இருக்கும் முதல் நபர் என்ற சாதனையை படைத்து இருக்கிறார் எலான் மஸ்க்.
Elon Musk become first person in the world to have a net worth of $600 billion, thanks to the increase in the market value of SpaceX
Elon Musk become first person in the world to have a net worth of $600 billion, thanks to the increase in the market value of SpaceXElon Musk become first person in the world to have a net worth of $600 billion, thanks to the increase in the market value of SpaceX
1 min read

ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் உயர்வு

Elon Musk Net Worth 2025 : World's first person to hit $600 billion: very Richest man in the world : உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் 42 சதவீத பங்குகளை தன்வசம் வைத்து இருக்கிறார். இந்தநிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு $800 பில்லியன் என்ற உச்சத்தை எட்டி இருக்கிறது.

சாதனையாளர் எலான் மஸ்க்

இந்த திடீர் உயர்வு மற்றும் டெஸ்லா நிறுவனப் பங்குகளின் மதிப்பும் அதிகரித்ததால் புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் எலான் மஸ்க்.

மஸ்க் வைத்திருக்கும் 42% பங்கின் மதிப்பு $317 பில்லியனாக உயர்ந்ததால், அவரது சொத்து மதிப்பு $600 பில்லியன் என்ற நிகர மதிப்பை எட்டியது.

உலகின் பெரும் பணக்காரர்

இதன் மூலம் உலக அளவில் 600 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், 58 லட்சம் கோடி சொத்து வைத்திருக்கும் முதல் நபர் என்ற பெருமை எலான் மஸ்க்கிற்கு கிடைத்து இருக்கிறது.

பங்குகள் உயர்வால் ஏற்றம்

10 ஆண்டுகளுக்குள் $1 டிரில்லியன் மதிப்புள்ள சம்பள ஒப்பந்தம், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் $500 பில்லியன் என்ற நிகர மதிப்பை அவர் எட்டினார். ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் சந்தை எதிர்பார்ப்புகளால் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in