உணவு டெலிவரியில் ரேபிடோ : பெங்களூருவில் அறிமுகம்

உலக அளவில் பிரபலமான ரேபிடோ நிறுவனம் உணவு டெலிவரி செய்யும் சேவையிலும் கால் பதிக்கிறது.
உணவு டெலிவரியில் ரேபிடோ : பெங்களூருவில் அறிமுகம்
https://x.com/NDTVProfitIndia/status/1931982711175999618/photo/1
1 min read

இருசக்கர வாகனம், கார் மூலம் பிரபலமாக திகழும் ரேபிடோ நிறுவனம், உணவு டெலிவரி சேவையிலும் சாதிக்க களம் காண்கிறது.

இம்மாத இறுதியில் இந்த சேவையை பெங்களூருவில் தொடங்கத் திட்டமிடு உள்ளது.

இதற்காக OWNLY என்ற செயலியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்கிறது. கமிஷன் கிடையாது. அதற்கு பதில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.100க்கும் குறைவான ஆர்டர்களுக்கு டெலிவரி கட்டணமாக ரூ.20ம், ரூ.100க்கும் அதிகமான ஆர்டர்களுக்கு ரூ.25ம் வசூலிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது சந்தையில் உள்ள மற்ற டெலிவரி சேவைகளை விட மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது

-----

logo
Thamizh Alai
www.thamizhalai.in