ஒரே நாளில் ”சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்த தங்கம்” : வெள்ளி விலையும் அதிகரிப்பு ! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்து, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Gold and silver prices have surged sharply today, shocking the public
Gold and silver prices have surged sharply today, shocking the publicgoogle
2 min read

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு

price of gold risen by Rs 1680 per sovereign in a single day : ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள சூழலில், தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சிறுக, சிறுக தங்கம் விலையானது சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்றும் அதிரடியாக தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்து இருக்கிறது.

தங்கத்தின் மீது மோகம்

தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது. எனவே தங்க நகைகளை வாங்க மற்ற நாட்டு மக்களை விட இந்தியர்களே அதிகமாக விரும்பி வாங்கி சேமிக்கிறார்கள்.

தங்கம் சேமிக்கும் பெண்கள்

இதனால், மகளிருக்கு அது பெரிய சேமிப்பாக நிலைத்து நிற்கிறது. அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. குழந்தைகளுக்கு எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை மக்கள் பார்த்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்தாலும், பெரிய அளவில் கவலைப்படாமல், தங்களால் முடிந்த அளவு நகைகளை வாங்கி வருகிறார்கள்.

உச்சத்தை தொட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 5 முதல் 6 வருடங்களில் சரசரவென உயர்ந்து நடுத்தர வர்க்க மக்களால் வாங்க முடியாத நிலையில் தான் நீடிக்கிறது.

6 வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 30 முதல் 35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

சவரன் ரூ.1,34,000

பின்னர் படிப்படியாக உயர்ந்து, இந்த ஆண்டு, தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய இலக்கை எட்டியது.

பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கம் விலை, இப்போது 1 லட்சத்து 7 ஆயிரம் முதல் 1 லட்சத்து 15 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது.

தங்கத்தின் முதலீடு அதிகரிப்பு

அமெரிக்கா- ஈரான் போரால் கடந்த சில நாட்களாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக விலை அதிகரித்து வருகிறது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

ஜூலை 18ம் தேதி கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனை ஆனது

ஜூலை 20ம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 13,150 ரூபாய்க்கும். சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த்து 1,05,200 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஜூலை 21ம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,220க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 அதிகரிப்பு

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 210 ரூபாய் உயர்ந்து 13,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து 1,07,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் ரூ.5,000 உயர்வு

இதே போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 240 ரூபாய்க்கும், சவரனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in