அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை, அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

Gold and Silver Prices Increased in Chennai : சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்துள்ளது.
Today Gold and Silver Rate Update in Chennai
Today Gold and Silver Rate Update in Chennaisource : google
1 min read

Today Gold and Silver Rate Update in Chennai : தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,12,400 க்கு விற்பனையாகிறது. தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்

மேற்காசிய போர் சூழல் காரணமாக கடந்த சில வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது. ஒருநாள் விலை ஏறுவதும் அன்று மாலையே விலை இறங்குவது என தங்கம் மற்றும் வெள்ளி விலை நகைப்பிரியர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் போக்குகாட்டி வருகிறது.

நேற்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

நேற்றைய தினம் ரூ.800 குறைந்திருந்த தங்கம் ஒரு சவரன் ரூ. 1,09,360க்கு விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.5 கிலோவிற்கு ரூ.5000 குறைந்து ஒரு கிராம் ரூ. 250க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.380 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,050 க்கும் சவரனுக்கு ரூ.3,040 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,12,400க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை

தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும் , கிலோவிற்கு ரூ.15,000 உயர்ந்து பார் வெள்ளி ரூ.2,65,000க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:

25 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,800

26 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,06,800

27 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,07,440

28 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,09,280

29 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,09,280

30 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,10,160

31 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,09,360

ஏப்ரல் 1ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,12,400 (இன்று)

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in