மீண்டும் உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை : ஒரு சவரன் ரூ.1,14,000-ஐ தாண்டியது! : வெள்ளி விலையும் அதிகரிப்பு

Today Gold and Silver Rate Update in Chennai : இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
Gold Price Crosses ₹1,14,000 Per Sovereign — Today's Gold and Silver Rates
Gold Price Crosses ₹1,14,000 Per Sovereign — Today's Gold and Silver Ratessource: google
1 min read

Gold Price Crosses ₹1,14,000 Per Sovereign — Today's Gold and Silver Rates

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்த திடீர் விலை உயர்வு நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை உயர்வுக்கான காரணங்கள்

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் ஏப்ரல் 16-ஆம் தேதி நிலவிய சர்வதேச நிலவரங்களின் தாக்கம் காரனமாக இன்று இந்தியச் சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

நேற்று (ஏப்ரல் 17) தங்கம் விலை சற்று குறைந்திருந்தது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியைத் தந்தது. நேற்று கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கும், சவரனுக்கு ரூ.1,200 சரிந்து ரூ.1,13,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், ஒரே நாளில் நேற்று குறைந்த அதே ரூ.1,200 இன்று மீண்டும் உயர்ந்து விலையை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று (ஏப்ரல் 18) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200வரை உயர்ந்துள்ளது. இதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய வெள்ளி விலை

தங்கத்தின் விலையை விட வெள்ளியின் விலை இன்று அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது. கிலோவிற்கு ரூ. 5,000 வரை உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,80,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்றைய தங்கம் விலை

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 275-க்கு விற்பனையான நிலையில், இன்றைய விலை உயர்வு வெள்ளி சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக ஏறி இறங்கும் இந்த விலை மாற்றத்தால், வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என நகைக்கடை உரிமையாளர்கள் கணிக்கின்றனர். திருமண சீசன் என்பதால், இந்த விலை உயர்வு பொதுமக்களின் பட்ஜெட்டைப் பெரிதும் பாதித்துள்ளது.

கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:

12ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,11,800

13ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,12,480

14ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,13,760

15ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,14,560

16ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,14,880

17ஆம் தேதி 1 சவரன் - ரூ1,13,680

18ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,14,880 (இன்று)

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in