2 நாட்களில் ரூ.2,000 உயர்ந்த தங்கம் : சவரன் 94,000ஐ தாண்டியது

தங்கம் விலை இரண்டு நாட்களில் 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, சவரன் 94,400 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Gold prices have increased by Rs 2,000 in two days, with a sovereign selling for Rs 94,400
Gold prices have increased by Rs 2,000 in two days, with a sovereign selling for Rs 94,400
1 min read

ஏறுமுகத்தில் தங்கம் விலை

Gold price in Chennai increased by Rs 640 per sovereign, 22-carat gold stands at Rs 94,400 per sovereign (8 grams) and Rs 11,800 per gram, up by Rs 80 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தடாலடியாக குறைந்தது, கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து 11,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலை தொடரும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு மாற்றாக, நேற்று விலை தாறுமாறாக உயர்ந்தது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு

அதேபோன்று இன்று 80 ரூபாய் விலை உயர்ந்து 11800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் நேற்று 93,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 94,000 ரூபாயை கடந்து 94,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் - சவரன் ரூ.1,02,984

24 கேரட் தங்கம் கிராமுக்கு 87 ரூபாய் விலை உயர்ந்து இருக்கிறது. நேற்று 12, 786 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் இன்று 12,873 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 696 ரூபாய் விலை உயர்ந்து 1,02,984 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் - சவரன் ரூ.78,760

18 கேரட் தங்கம் நேற்று கிராம் 9,780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 65 ரூபாய் விலை உயர்ந்து 9,845 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 78 ,760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .

அமெரிக்க மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்ற கணிப்புதான் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

இதேபோன்று வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. அதன்படி இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ரூ.176க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து, ரூ,1.76 லட்சமாகவும் இருந்தது. ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் விலை உயர்ந்து 1,76,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

கடந்த இரண்டு நாட்களில் வெள்ளியின் விலை கிராமுக்கு ஐந்து ரூபாயும் கிலோவுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in