

தங்கம் விலை அதிகரிப்பு
Gold Rate Today in Chennai : இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்னரே, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், வரி விதிப்பு கொள்கையில் ஆரம்பமாகி உலகளவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் இந்தியாவில் பிரதிபலித்துள்ள நிலையில், தங்கத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அவ்வப்போது ஏற்ற, இறக்கம் என்று காணப்படும் தங்கத்தின் விலை, பொதுவாக முந்தைய விலையை காட்டிலும் உச்சத்தை தொட்டுள்ளது என்றால் மிகையாகாது.
இன்றைய தங்கம் நிலவரம்
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படும் நிலையில், நேற்று முன்தினம் (நவ.,11), ஆபரண தங்கம் கிராம் 11,700 ரூபாய்க்கும், சவரன் 93,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு 800 உயர்வு
தொடர்ந்து (நவ.,12- ஆம் தேதி நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 11,600 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 800 ரூபாய் சரிவடைந்து, 92,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 3 ரூபாய் உயர்ந்து, 173 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் நவம் 13 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 லட்சத்தை தொடுமா தங்கம் விலை
சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94,400க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.182க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை தொட்டு உள்ள நிலையில், தங்கத்தின் தொடர் ஏற்றத்தால், விரைவில் 1 லட்சத்தை கூடி விடுமோ என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.