

உலகத்தின் அச்சாணி தங்கம்
List of Top 10 Countries with Highest Gold Reserves 2025 : உலக அளவில் பொருளாதாரத்திற்கு அச்சாணியாக, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அடித்தளமாக இருப்பது தங்கம். ஒரு நாடு வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பை வைத்தே அந்நாட்டின் பொருளாதார நிலை நிர்ணயிக்கப்படுகிறது. மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலையை பொருத்தே, விலைவாசி ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
அந்தவகையில் உலகின் அதிக அளவில் தங்கத்தை சேமித்து வைத்து இருக்கும் டாப் 10 நாடுகளின் விவரங்களை பார்க்கலாம்.
1. USA : உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா தான். அந்த நாட்டிடம் 8,133.46 டன் தங்கம் இருப்பில் உள்ளது. மிகப்பெரிய தாதுப்பொருள் உள்ளது. இது உலகின் தங்க இருப்பில் 25% ஆகும். அமெரிக்க டாலரின் மதிப்பு எப்போதும் வலுவாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
2. GERMANY : அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஜெர்மனி உள்ளது. 3,351.53 டன் தங்கத்தை கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக தங்க இருப்பு வைத்திருக்கும் நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இந்தநாட்டின் பெரும்பாலான தங்கம் நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ள மத்திய வங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
3. ITALY : மூன்றாவது பெரிய தங்க இருப்பு கொண்ட நாடு இத்தாலி. இதனிடம் 2,451.84 டன் தங்கம் இருப்பாக இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், இத்தாலி தனது தங்க இருப்பை அதிகமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. பெரும்பாலான தங்க இருப்புக்கள் இத்தாலிய வங்கிகளில் இருக்கின்றன.
4. FRANCE : பிரான்சிடம் 2,436.94 டன் தங்கம் உள்ளது. பல தசாப்தங்களாக தங்க இருப்புகளை அதிகரித்து வரும் நாடுகளில் பிரான்சும் ஒன்று. இதன்காரணமாக பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை பிரான்ஸ் தொடர்ந்து பராமரித்து வருகிறது. தனது நாட்டு வங்கிகளில் தங்கத்தை இருப்பு வைத்து இருப்பது பிரான்சின் வலிமையாக பார்க்கப்படுகிறது.
5. CHINA : சீனா 2,191.53 டன் தங்கத்தை வைத்திருக்கிறது.அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு மிரட்டலை முன்கூட்டியே கணித்த சீனா, தனது தங்க இருப்பை தொடர்ந்து அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, தங்கத்தின் முக்கிய உற்பத்தியாளராகவும் விளங்கி வருகிறது.
6. INDIA : இந்தியா 879.78 டன் தங்கத்தை வைத்திருக்கிறது. தங்கம் மக்களின் கலாச்சாரத்தில் ஒரு பகுதி இருக்கிறது. இந்தியாவில் வீடுகளிலும் கோயில்களிலும் மிகப்பெரிய தங்க இருப்புக்கள் உள்ளன, ஆனால் இவை அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களில் சேர்க்கப்படவில்லை. நாட்டின் தங்க இருப்பு இந்திய ரிசர்வ் வங்கியால் நிர்வகிக்கப்படுகிறது.
7. JAPAN : அதிகம் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 7ம் இடத்தில் ஜப்பான் உள்ளது. சுமார் 845.97 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது.
8. TURKEY அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 8ம் இடத்தில் துருக்கி உள்ளது. அந்நாடு சுமார் 634.76 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
9. POLAND : அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 9ம் இடத்தில் போலந்து உள்ளது. சுமார் 515.47 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது.
10. ENGLAND : அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 10ம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. சுமார் 310.29 டன் தங்கம் அந்த நாட்டின் இருப்பாக இருக்கிறது.
ரஷ்யா தனது இருப்பில் தோராயமாக 2,335.5 டன் தங்கத்தை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உக்ரைன் போர் காரணமாக அந்த நாட்டிடம் தங்க இருப்பு குறைந்து விட்டதாக, பொருளாதார நிலை என்ன போன்ற உறுதியான தகவல்கள் இல்லை. பெரும்பாலான தங்கம் மாஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சேமிக்கப்பட்டுள்ளது.
=====