Gold Rate Today : தொடருமா இந்த தங்கத்தின் சரிவு- நிலவரம் எப்படி?

இன்றைய நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவை கண்டுள்ளது.
Gold Rate Today in Chennai Will this decline in gold continue what is Current situation Of  Gold Price?
Gold Rate Today in Chennai Will this decline in gold continue what is Current situation Of Gold Price?Google
1 min read

தங்கத்தின் விலை

Gold Rate Today in Chennai : உலக நாடுகளின் பொருளாதர மாற்றங்களால், தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கையால், தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை விண்ணை முட்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கத்தை பற்றி யோசிப்பது கூட இல்லை, வெள்ளியும் சரிக்கு சமமாக உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் தங்கத்தின் நிலவரம்

சர்வதேச நிலவரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டு நிகழும் மாற்றத்தால், தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (நவ.,15) ஆபரண தங்கம் கிராம் 11,550 ரூபாய்க்கும், சவரன் 92,400 ரூபாய்க்கும் விற்பனையானது.வெள்ளி கிராம், 175 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

17 ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி விலை

வழக்கம் போல், ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (நவ., 17) தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 11,540 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 80 ரூபாய் சரிவடைந்து, 92,320 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 173 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தங்கத்தின் இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று (நவ.,18) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.91,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.145 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,400க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.170க்கு விற்பனை(Silver Rate Today) செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவை கண்டுள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்தாலும் இதன் ஏற்றம் எப்பொழுது வேண்டுமானாலும் இருக்கும் என்ற நிலையே தற்போது இருந்து வருகிறது, நடுத்தர மக்கள் தங்கத்தின் நிலை கண்டு நாளுக்கு நாள் அதிர்ச்சியடைந்து வரும் நிலையில், கடந்த 6 மாதங்களில் தங்கம் உச்சம் தொட்டுள்ளது என்றால் மிகையாகது. எனவே, 1000, 500 என ஏறி இறங்கி வரும் தங்கம் விலையில், முந்தைய விலையை எப்போது அடையும் என்று நடுத்தர வாசிகள் பெருமூச்சு விட்டு காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in