நேற்று மாலை ரூ. 5,360 உயர்ந்திருத தங்கம் : இன்று அதிரடியாக குறைந்தது, சவரனுக்கு ரூ.2,720 சரிவு!

Today's Gold and Silver Prices in Chennai : கிட்டத்தட்ட கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.13,680 குறைந்துள்ளது.
Gold and Silver Prices Drop Sharply Today in Chennai
Gold and Silver Prices Drop Sharply Today in Chennaisource : google
1 min read

Gold and Silver Prices Drop Sharply Today

மேற்காசிய போரால் சரியும் தங்கம், வெள்ளி விலை

Gold Price Today Decreased in Chennai : கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் கிட்டத்தட்ட ரூ.13,680 அதிரடியாக குறைந்து நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சவரனுக்கு ரூ.2,720 குறைந்தது தங்கம்!

நேற்று காலையில் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்த தங்கம் மாலையில் ரூ. 5,360 உயர்ந்திருந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 அதிரடியாக குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.340 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,000க்கும். சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,04,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிட்டத்தட்ட கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.13,680 குறைந்துள்ளது.

மேற்காசிய போர் காரணமாக தங்கம் விலை சரியும் நிலையில் தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

இன்றைய வெள்ளி விலை

அதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 240 க்கும் கிலோவிற்கு ரூ 10 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

1 லட்சத்திற்குள் தங்கம் விலை சரியும்?

தற்போது ரூ. 1,04,000 விற்பனை செய்யப்பட்டு வரும் தங்கம் அடுத்த சில நாட்களில் 1 லட்சத்திற்குள் குறையும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நகைப் பிரியர்களும் அதீத மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:

17 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,17,200

18 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,16,560

19 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,11,200

20 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,11,600

21 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,960

22 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,08,960

23 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,06,720

24 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,04,000

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in