Google : ஏஜெண்டுகளாக மாறும் ஏஐ : கூகுள் நிறுவனம் கணிப்பு!
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி
Google Predictions on AI Agent : ஆரம்ப காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால், தகவல் தொடர்பு சாதனங்களின் அடிப்படையான, அலைபேசி மனிதர்கள் மத்தியில் நுழைந்து, தகவல் தொடர்பை மனிதர்களிடையில் எளிதாக்கியது. தொடர்ந்து மனிதர்கள் கண்டுபிடிப்புகளால், புதிய மாற்றங்களுக்கு இடையில் புதிதாக, இயந்திரங்கள், வலைத்தொடர்புகள் என அனைத்தும் உருவாக்கப்பட்டு. இன்றையா காலகட்டம் வரை மென்பொருள் விறுவனம், டிஜிட்டல் பணம் அனைத்தும் டிஜிட்டல் உலகிற்கு அடியெடுக்க தொடங்கியுள்ளது.
அதன்படி, தற்போது மனிதர்களுக்கே சவால் விடும் அலவிற்கு ஏஐ என்பது மென்பொருள் மற்றும் டிஜிட்டலாக மட்டும் இல்லாமல்,ஏஐ வளர்ச்சி இயந்திரம் ரோபோக்கள் என மாற்றம் கண்டுள்ளது. ஏஐ தற்போதைய வளர்ச்சி எப்படியொறு புரட்சியை ஏற்படுத்தி நன்மை பயக்குமாக, அதற்கு நேரெதிராக அதன் தீமையும் அதன் விளைவுகளும் அதிகமே. எனவே, மனிதர்கள், ஏஐ உபயோகப்படுத்துகிறோம் என்பதை தாண்டி ஏஐயை எப்படி உபயோகப்படுத்துகிறோம், எதற்காக உபயோகப்படுத்துகிறோம் என்பதே முக்கியமான ஒன்றாகும்.
ஏஜெண்டுகளாக மாறும் ஏஐ
அதன்படி, தற்போது ஏஐயால் மனிதர்கள் வேலையிழக்கும் அபாயமும் அதிகரித்துள்ளது. இதனால், பலர் வேலையிழந்து கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில், 2026-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) அடுத்த நிலைக்கு சென்று, மனிதர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுயமாக திட்டமிட்டு செயல்படும் "ஏஐ ஏஜெண்டுகளாக" உருவெடுக்கும் என்று கூகுள் நிறுவனம் கணித்துள்ளது. இந்த ஏஐ ஏஜெண்டுகள் சிக்கலான அலுவலக வேலைகளை தானாகவே பகுப்பாய்வு செய்து, பல கட்ட திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.
இதன் மூலம் ஊழியர்கள் கடினமான வேலைகளை எளிதில் முடிப்பதோடு, நிறுவனங்களின் உற்பத்தி திறனும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏஐ வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மனிதர்கள் ஏஐ வளர்ச்சி விகிதத்தை கணக்கீடு செய்து உயர்த்துவதை காட்டிலும், விழிப்பாக இருந்து அதனை உபயோகப்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

