

ஜிஎஸ்டி வசூல் விதிப்பு
India's gross Goods and Services Tax (GST) collections for July 2026 rose by 15.4% year-on-year to reach ₹2.11 lakh crore, driven by strong growth in import revenues and steady domestic demand.
இந்தியாவில் ஒரேநாடு ஒரே என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஜிஎஸ்டி (GST) என்பது சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) ஆகும். இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் ஒரு மறைமுக வரியாகும்.
ஜூலை 1, 2017 அன்று அமல்படுத்தப்பட்டது. முந்தைய பலவிதமான வரிகளை நீக்கிவிட்டு, நாடு முழுவதும் ஒரே சீரான வரியைக் கொண்டு வந்தது.
இந்தியாவில் வரி வசூல்
CGST என்பது ஒரே மாநிலத்திற்குள் நடக்கும் வியாபாரத்திற்கு மத்திய அரசு வசூலிக்கும் வரி.
SGST என்பது ஒரே மாநிலத்திற்குள் நடக்கும் வியாபாரத்திற்கு மாநில அரசு வசூலிக்கும் வரி.
IGST என்பது இரண்டு வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே அல்லது வெளி மாநிலப் பரிவர்த்தனைகளின்போது மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரி.
பொருட்களின் விலையில் மேல் வரியின் தாக்கம் குறைக்கப்பட்டு, வெளிப்படைத்தன்மை அதிகரிக்கிறது.
ஜூலை ஜிஎஸ்டி வசூல் - 2.11 லட்சம் கோடி
இந்தநிலையில், ஜூலை மாதம் மொத்த ஜிஎஸ்டி (GST) வசூல் ஜூலை 2026 இல் ரூ. 2.11 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதி அதிகரிப்பு காரணமாக முந்தைய ஆண்டைக் காட்டிலும் 15.4 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் விவரங்கள்
மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 2.11 லட்சம் கோடி
வளர்ச்சி விகிதம்: 15.4%
நிகர ஜிஎஸ்டி வருவாய் (Net Revenue): ரூ. 1.81 லட்சம் கோடி
இறக்குமதி ஜிஎஸ்டி ரூ. 66,511 கோடி
தமிழகத்தின் பங்கு: ரூ. 7,391 கோடி
===========