நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் ‘டிசைனர் அரிசி' : சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்​டி நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு!

Designer Rice developed by CSIR-NIIST : கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தில் அமைந்துள்ள மத்திய அரசின் அறி​வியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்​சிலில் டிசைனர் அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
High Protein Designer Rice developed by CSIR-NIIST to boon for patients new invention here is Full Details in Tamil
High Protein Designer Rice developed by CSIR-NIIST to boon for patients new invention here is Full Details in Tamilgoogle
1 min read

சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்டி நிறு​வனம் கண்டுபிடித்த டிசைனர் அரிசி

High Protein Designer Rice developed by CSIR-NIIST : மத்​திய அரசின் அறி​வியல், தொழில் துறை ஆராய்ச்சி கவுன்​சில் - தேசிய பல்​துறை அறி​வியல், தொழில்​நுட்ப நிறு​வனம் (சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்​டி) கேரள தலைநகர் திரு​வனந்​த​புரத்​தில் செயல்​படு​கிறது.

சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்டி நிறு​வனம் சார்​பில் அதிக புரோட்​டீன், இரும்புச் சத்​து, போலிக்அமிலம், வைட்​ட​மின் பி12 உள்ளிட்ட ஊட்​டச் சத்​துகள் அடங்​கிய ‘டிசைனர் அரிசி' ரகம் கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது.

இதில், சாதாரண அரிசி​யை​விட 3 மடங்கு அதிக புரதச் சத்து உள்​ளது. இதன்​மூலம் பொது​மக்​களின் ஊட்​டச்​சத்து குறை​பாட்டை போக்க முடி​யும். மேலும் டிசைனர் அரிசி​யில் கிளைசெமிக் இன்​டெக்ஸ் (ஜிஐ) அளவு மிக​ குறை​வாக உள்​ளது.

நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் அரிசி

அதிக ஜிஐ அளவு உள்ள அரிசி ரகங்​களால் ரத்​தத்​தில் குளுக்​கோஸ் அளவு விரை​வாக உயரும். புதிய அரிசி​யில் ஜிஐ அளவு குறை​வாக இருப்​ப​தால் சர்க்​கரை நோயாளி​களுக்கு வரப்​பிர​சாத​மாக அமை​யும்.

இதுதொடர்​பாக சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்டி நிறு​வனம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “டிசைனர் அரிசி ரகம் தொடர்​பான தொழில்​நுட்​பம், டாடா கன்​சி​யூமர் புராடக்ட்ஸ், திருப்​பூரை சேர்ந்த எஸ்​எஸ் சோல் புட்ஸ் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்படவுள்ளது.

இந்த ஒப்​பந்த பரி​மாற்​றம் தொடர்​பான நிகழ்ச்சி டெல்​லி​யில் பிப். 18-ல் நடை​பெறுகிறது” என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

விரைவில் நலம்பெரும் பொதுமக்கள்

இன்றைய நவீன கலாச்சாரத்தில், வாழ்க்கை முறையின் மாற்றத்தால், மனிதர்களின் உடல் நலம் விரைவில், சீர்கெட்டு நோய்வாய்படுகின்றனர்.

இதில் வெறும் 30 சதவிகித மனிதர்களே தங்களின் உடல் நலத்தை கவனத்தில் கொண்டு உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கத்தை மேற்கொள்கின்றனர்.

இந்த சூழலில், சிஎஸ்​ஐஆர்​-என்​ஐஐஎஸ்​டி நிறுவனம் தரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டிசைனர் அரிசியானது நடுத்தர மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் அளவிற்கு புழக்கத்தில் வந்தால், இதன் பயன்பாடு அதிகரித்து மக்கள் விரைவில் நலம் பெறுவர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in