Digital Payment: உலகளவில் UPI முதலிடம்: பன்னாட்டு நிதியம் பாராட்டு

உலகின் மிகப்பெரிய, விரைவான பணம் செலுத்தும் வழியாக யுபிஐ ( UPI ) முறையை ஐ.எம்.எப்., அமைப்பு அங்கீகரித்துள்ளது.
IMF recognized UPI as the world's largest and fastest payment method
IMF recognized UPI as the world's largest and fastest payment method
1 min read

டிஜிட்டல் பண பரிவர்த்தனை

The International Monetary Fund has recognised India's Unified Payments Interface (UPI) as the world's largest real-time payments system : இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை யுபிஐ மூலம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனை விரிவடைந்து இருக்கிறது.

மத்திய அரசு விளக்கம்

இந்தநிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ” ஐ.எம்.எப்., அமைப்பு, 'வளர்ந்து வரும் டிஜிட்டல் சில்லரை பணம் செலுத்தும் முறை' என்ற பெயரில் கடந்த ஜூன் மாதம் ஆய்வு நடத்தியது.

யுபிஐ ஆதிக்கம்

உலகின் மற்ற பணம் செலுத்தும் முறைகளைவிட, இந்தியாவின் யு.பி.ஐ., முறை மிகப்பெரியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேர்ல்டுவைடு பிரைம் டைம் பார் ரியல் டைம் 2024 (ஏ.சி.ஐ., வேர்ல்டு வைடு) அறிக்கையின்படி, உலக அளவில் ரியல் டைம் பேமென்ட் முறைகளில் 49 சதவீத பங்கை யு.பி.ஐ., பிடித்திருக்கிறது.

12,930 கொடி யுபிஐ பரிவர்த்தனைகள்

இந்தியாவில் 12,930 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பிரேசில், தாய்லாந்து, சீனா, தென்கொரியா நாடுகளின் பரிவர்த்தனைகள், இந்தியாவைவிட மிகக்குறைந்த அளவிலேயே இருக்கின்றன.

2024--25 நிலவரம்

* கியூ.ஆர்., கோடு பரிவர்த்தனைகள் - 56.86 கோடி

* பரிவர்த்தனை மேற்கொண்டவர்கள் - 6.50 கோடி

IMF பாராட்டுக்கான அம்சங்கள்:

* யுபிஐ, இந்தியாவுக்கு உலகளாவிய அதிவேகப் பணப் பரிமாற்றத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

* 2016ல் தொடங்கப்பட்டதிலிருந்து யுபிஐ, டிஜிட்டல் கட்டணத் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது.

* யுபிஐ, இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறையை மாற்றியமைத்து, பல கோடி மக்களை முறையான பொருளாதாரத்தில் இணைத்துள்ளது.

* இதன் காரணமாக, இந்தியாவில் பணப் பயன்பாடு குறைந்து, மின்னணு பணப்பைகள் (e-wallets) மற்றும் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

* யுபிஐ, தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தால் (NPCI) நிர்வகிக்கப்படுகிறது, இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்டு, இலவசமாகவும், வேகமாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் செயல்படுகிறது.

* பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், நேபாளம் போன்ற பல நாடுகள் யுபிஐ போன்ற அமைப்புகளை ஏற்க இந்தியாவுடன் இணைந்துள்ளன. இது உலகளாவிய டிஜிட்டல் தரநிலைகளை நிர்ணயிக்க இந்தியாவுக்கு உதவும்.

* ஆதார் மற்றும் டிஜிலாக்கர் போன்றவற்றுடன் யுபிஐ ஒருங்கிணைக்கப்பட்டு, அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக பயனாளிகளுக்கு அனுப்புவதன் மூலம் கசிவுகளைத் தடுத்துள்ளது.

=======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in