தற்காலிக போர் நிறுத்தம் எதிரொலி : தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,720, வெள்ளி விலை ரூ.10 உயர்வு

ஈரான் அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது உயர்ந்துள்ளது
Impact of Temporary Ceasefire: Gold prices rise by Rs. 2,720 per sovereign; silver prices increase
Impact of Temporary Ceasefire: Gold prices rise by Rs. 2,720 per sovereign; silver prices increase google
1 min read

தொடர் ஏற்றத்தில் தங்கம்

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்து ரூ.1,13,600க்கும் விற்பனை ஆகிறது. அதன்படி இன்று தங்கத்தின் விலை ரூ.340 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது

தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு

ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து அதன் தாக்கம் சர்வதேச வர்த்தகத்தில் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது .அதன்படி இந்தியாவிலும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது

ஏற்றம் கண்ட பங்குச்சந்தை

இன்று காலை இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இந்தச் சூழலில் இன்று தங்கம் விலையும் உயர்ந்துள்ளது.

விலைக்கான நிர்ணயம்

அதன்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

24 காரட் தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.15,491 மற்றும் ஒரு பவுன் ரூ.1,23,928-க்கும் விற்பனை செய்யப்படுகிறது . வெள்ளி கிராமுக்கு ரூ.10 என உயர்ந்து,

ஒரு கிராம் ரூ.265-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை ஆகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in