”இந்தியாவுக்கு 5வது இடம்” : அமெரிக்கா, ஜப்பானை பின்னுக்கு தள்ளியது : சந்தை மதிப்பு 5.56 லட்சம் கோடி...!

உலகின் பெரிய பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தைகளில் இந்தியா 5-ஆவது இடத்துக்கு முன்னேறி சாதித்து இருக்கிறது.
India achieved milestone moving up to 5th position among world's largest listed stock markets
India achieved milestone moving up to 5th position among world's largest listed stock marketssource:thamizhalai,ai generated
1 min read

தேசியப் பங்குச் சந்தை NSE

NSE becomes world's fifth-largest listed exchange by market cap, overtakes Nasdaq and HKEX இந்​தி​யாவின் தேசியப் பங்குச் சந்தை என்எஸ்இ, என்று அழைக்கப்படுகிறது. இது கடந்த செப்டம்பர் மாதம் உலகளவில் பெரிய சந்தைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது.

NSE மதிப்பு 550 லட்சம் கோடி

இதன் காரணமாக என்​எஸ்இ பங்​கு​களின் விலை தொடர்ந்து ஏற்​றம் கண்டு வரு​கிறது. தற்​போதைய சந்​தைத் தரவு​களின்​படி, என்​எஸ்இ-யின் சந்தை மூலதனம் சுமார் 59.7 பில்​லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.5.56 லட்​சம் கோடி) உயர்ந்​துள்​ளது.

நாஸ்டாக், ஹாங்காங் பங்குச் சந்தைகளை முந்தியது

இதன் மூலம், 58.1 பில்​லியன் டாலர் மதிப்பு கொண்ட ஹாங்​காங் பங்​குச் சந்​தையையும், 57.7 பில்​லியன் டாலர் மதிப்பு கொண்ட நாஸ்​டாக் நிறு​வனத்​தையும் என்​எஸ்இ முந்​தி சாதித்து இருக்கிறது.

சந்தை மதிப்​பில் முதலிடத்​தில் சிஎம்இ குரூப் 111.05 பில்​லியன் டாலர் உள்​ளது.

இதைத் தொடர்ந்து இன்​டர்​காண்​டினென்​டல் எக்ஸ்​சேஞ்ச் (95.50 பில்​லியன் டாலர்), டாய்ச் போர்ஸ் (65.00 பில்லியன் டாலர்),

லண்​டன் ஸ்​டாக் எக்ஸ்​சேஞ்ச் குரூப் (60.30 பில்லியன் டாலர்) ஆகியவை உள்​ளன. மும்பை பங்​குச் சந்தையில் என்​எஸ்இ பங்கு விலை ரூ.47.80 (2.18%) உயர்ந்து ரூ.2,236.10 என்ற அளவில் வர்த்​தக​மானது.

சந்தை மதிப்பு 5.56 லட்சம் கோடி

இதன் மூலம் ரூ.5.56 லட்​சம் கோடி சந்தை மதிப்பை எட்​டிய என்எஸ்இ இந்​தி​யாவின் 9-வது பெரிய பட்​டியலிடப்​பட்ட நிறு​வனமாக உயர்ந்​துள்​ளது.

இதன் மூலம், ரூ.5 லட்​சம் கோடி சந்தை மதிப்பு கொண்ட கோட்​டக் மஹிந்​திரா வங்கி மற்​றும் எல்​ஐசி ஆகிய முன்னணி நிறு​வனங்​களை என்​எஸ்இ பின்​னுக்​குத் தள்​ளி​யுள்​ளது.

வங்கி, நிதிச் சேவை​கள் மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத் துறை ஜாம்​பவான்​களின் வரிசையில் தற்​போது என்​எஸ்இ-யும் இணைந்துள்ளது.