

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி
140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை இருக்கிற நமது நாட்டுல, கச்சா எண்ணெய் உற்பத்தி என்பது மிக குறைவாக தான் கிடைக்குது. லட்சக் கணக்கான வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கு கோடிக் கணக்கான லிட்டர் பெட்ரோல், டீசல் தேவை என்பது நாள்தோறும் இருக்கு.
85 சதவீதம் இறக்குமதி
எனவே, இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையை வெளிநாடுகளில் இருந்து பெற்று வருது. புள்ளி விவரங்கள்படி பார்த்தா, தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்தே பெறுகிறது இந்தியா. குறிப்பா ஈரான், ரஷ்யா, அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மட்டுமின்றி, திரவ எரிவாயுவையும் கொள்முதல் செய்து வருது நம்ம நாடு.
பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி
அதேசமயம், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணி நாடாக இருக்கு இந்தியா. 2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் ஏற்றுமதி 47.9 பில்லியன் டாலராக உயர்ந்து இருக்கு.
இந்தியாவின் ஏற்றுமதி சாதனை
தென்கிழக்காசிய நாடுகளுக்கான ஏற்றுமதி மட்டும் 56.1% அதிகரிச்சு, வியப்பில் ஆழ்த்தி வருது.
வட அமெரிக்காவுக்கு மட்டும் 47.9 பில்லியன் டாலர் மதிப்புக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.. இது போன வருஷத்தை விட 7.9% அதிகம். ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான ஏற்றுமதியும் 4.2% உயர்ந்து இருக்கு.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு பார்த்தீங்கன்னா, கடந்த ஆண்டை விட 47 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுல தென்கிழக்கு ஆசிய நாடுகள் தான் டாப்.
ரஷ்யாவுக்கு டீசல் ஏற்றுமதி
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் மற்றும் தடைச் சூழல்களால் காரணமா, இந்தியா ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கி, அதனைச் சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது.
பெட்ரோலிய பொருட்கள் கிடைப்பதில் சிரமங்களை சந்திக்கும் நாடுகள் இந்தியாவின் உதவியை எதிர்பார்த்து தான் காத்திருக்கின்றன.
ஏன், நமக்கு கச்சா எண்ணெய்யை தேவையான அளவு கொடுக்கும் ரஷ்யாவும், டீசலுக்காக இந்தியாவின் தயவை தான் எதிர்நோக்கி இருக்கு. ஏன்னா, போர் காரணமா அந்த நாட்டோட சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் முடங்கி போயிருக்கின்றன.
நம்ம நாட்டுல இருந்து டீசல், பெட்ரோல் விமான எரிபொருள், நாப்தா மற்றும் எல்.பி.ஜி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
குஜராத்தில் மிகப்பெரிய ஆலை
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு வளாகமாக திகழ்கிறது. இங்கு தினமும் 14 லட்சம் பேரல்கள் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி ஆகின்றன.
இதேபோல, பாராதீப், மங்களூர், பானிபட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் தினமும் சுமார் 9 லட்சம் பீப்பாய்கள் உற்பத்தி ஆகின்றன.
ஏற்றுமதியால் இந்தியாவுக்கு கிடைக்கும் லாபம்
சரி கச்சா எண்ணெய் கணிசமா இறக்குமதி செஞ்சு, அதை சுத்திகரிச்சு, பெட்ரோலிய பொருட்கள வெளிநாடுகளுக்கு விக்கிறதுல, இந்தியாவுக்கு என்ன லாபம் இருக்கு அப்படிங்கற கேள்வி எழலாம்.
கச்சா எண்ணெய் வாங்குறதால இந்தியாவுக்கு இறக்குமதி வருவாய் கணிசமா செலவாகுது. பெட்ரோலிய பொருட்கள ஏற்றுமதி செய்யறதால, இந்த இறக்குமதி செலவில் சுமார் 30% அளவுக்கு ஈடுகட்டப்படுது.
ஏற்றுமதியில் 2ம் இடத்தில் இந்தியா
சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் உலக நாடுகளோட வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் நிக்குது.
அந்நிய செலாவணியால் லாபம்
இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் சராசரியாக 3.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமா இருக்கு. இந்தியாவுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய லாபமே இதன் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணிதான்.
30% ஈடுகட்டப்படும் அந்நிய செலாவணி
கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யறதால, அதிகப்படியான அமெரிக்க டாலர்களைச் செலுத்த வேண்டி இருக்கு. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈட்டப்படும் வருவாய், இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி செலவில் சுமார் 30 சதவீதத்தை ஈடுகட்டி விடுதறதால, நமக்கான அன்னிய செலாவணி மிச்சப்படுத்தப்படுது.
பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி மீது வரி விதிப்பதால், அரசுக்கு கிடைக்கும் நிதி, பொருளாதாரத்தில் பெரிய தூணாக விளங்கி, இந்தியாவின் வளர்ச்சியை காரணமாக இருந்து வருது.
=================