மேற்காசிய போர் சூழலிலும் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரும்: ஐஎம்​எஃப் கணிப்பு! ​

2026 மற்​றும் 2027-ம் ஆண்​டு​களில் உலகின் மிக வேக​மாக வளரும் முக்​கியப் பொருளா​தார நாடாக இந்​தியா தொடர்ந்து நீடிக்​கும் என்று சர்வதேச நாணய நிதியம் ஐஎம்​எஃப் தெரிவித்துள்ளது
Indian economy to grow rapidly even in West Asian war environment: IMF
Indian economy to grow rapidly even in West Asian war environment: IMF google
1 min read

நீடிக்கும் போர்

தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போரால் உலக நாடுகள் அனைத்தும் பல்லவேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு , பொருளாதார வீழ்ச்சி என பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன உலக நாடுகள்.

ஐஎம்​எஃப் கணிப்பு

நிலவும் இந்த மேற்காசிய போருக்கிடையே,2026 மற்​றும் 2027-ம் ஆண்​டு​களில் உலகின் மிக வேக​மாக வளரும் முக்​கியப் பொருளா​தார நாடாக இந்​தியா தொடர்ந்து நீடிக்​கும் என்று சர்வதேச நாணய நிதியம் ஐஎம்​எஃப் கணித்​துள்​ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

ஐஎம்​எஃப்​-ன் உலகப் பொருளா​தா​ரக் கண்​ணோட்ட அறிக்கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: இந்​தி​யா​வின் வளர்ச்சி விகிதம் 2026 மற்​றும் 2027-ம் ஆண்​டு​களில் தலா 6.5 சதவீத​மாக நீடிக்கும் என்றும்.

மேற்கு ஆசி​யப் பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ச் சூழலால் சர்​வ​தேச சந்​தைகளும் விநியோகச் சங்​கி​லி​யும் கடும் பாதிப்​புக்கு உள்ளாகியுள்ளன. இதன் விளை​வாக, உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த முந்​தைய மதிப்​பீடு குறைக்கப்பட்டுள்ளது

சில முக்கிய பொருளாதார கணிப்பு

அதனபடி சில பொருளாதார கணிப்புகளை ஐஎம்​எஃப்​- வெளியிட்டுள்ளது கடந்த ஜனவரி மாதம் 3.3% ஆக இருக்​கும் எனக் கணிக்​கப்​பட்ட உலகப் பொருளா​தார வளர்ச்​சி, தற்​போது 3.1 சதவீத​மாகக் குறை​யும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது.

உலக அளவில் நில​வும் எரிசக்தி மற்​றும் உணவுப் பொருட்கள் விலை உயர்​வால், இந்​தி​யா​வில் பணவீக்​கம் 2026-ல் 4.7 சதவீத​மாக உயரக்​கூடும். பின்​னர் 2027-ல் இது 4 சதவீத​மாகக் குறை​யும். 2025-ம் ஆண்​டுக்​கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்​பீடு 7.6% ஆக இருக்​கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்பாராத வீழ்ச்சியை சந்திக்க நேரிடும்

ஈரான் அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டாத நிலையில் , தொடர்ந்து போர் நீடிக்கும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது .

இந்​தப் போர் மேலும் தீவிரமடைந்​தால், உலகப் பொருளா​தார வளர்ச்சி 2026-ல் 2 சதவீதம் வரை வீழ்ச்​சி​யடை​யும் அபா​யம் உள்​ளது. எரிசக்தி உள்​கட்​டமைப்​பு​கள் சேதமடைந்​தால் பாதிப்பு இன்​னும் கடுமை​யாக இருக்​கும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

=========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in