ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி : அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.96ஐ கடந்தது : இறக்குமதி பொருட்கள் விலை உயரும்...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத அளவு 96 ரூபாயை கடந்து அதிர்ச்சி அளித்து இருக்கிறது.
Indian rupee against the US dollar has shocked the world, exceeding an all-time high of 96 rupees
Indian rupee against the US dollar has shocked the world, exceeding an all-time high of 96 rupees.google
1 min read

ஈரான் போர்

Rupee in Free Fall, Now Crosses 96 Against Dollar : ஈரான் போர் மற்​றும் ஹார்​முஸ் ஜலசந்​தி முடக்கம் காரண​மாக கச்சா எண்​ணெய் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

ஈரான் போர் 75 நாட்களை கடந்து விட்ட நிலையில், அதனால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து விட்டதால், வேறு வழியின்றி பெட்ரோல், டீசல் விலைகளை அனைத்து நாடுகளும் உயர்த்தி விட்டன.

கச்சா எண்ணெய் பேரல் 110 டாலர்

இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ரூபா​யின் மதிப்பு கடந்த சில வாரங்​களாகவே கடுமையான அழுத்​தத்​தில் உள்​ளது.

தற்​போது கச்சா எண்​ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 அமெரிக்க டாலருக்கு அரு​கிலேயே நீடிக்கிறது.

85% கச்சா எண்ணெய் இறக்குமதி

இதனால் நாட்​டின் கச்சா எண்​ணெய் இறக்​குமதி செலவு அதி​கரிப்​ப​தோடு, நாட்​டின் வெளி​நாட்டு வர்த்​தகத்​தின் மீதும் அழுத்​தத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இந்​தியா தனது கச்சா எண்​ணெய் தேவை​யில் 85 சதவீதத்​துக்கு அதி​க​மானவற்றை இறக்​குமதி செய்கிறது.

பலவீனமடைந்த ரூபாய் மதிப்பு

இதனால், உலகளா​விய எண்ணெய் விலை உயர்​வானது இந்​திய ரூபா​யின் மதிப்​பில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​துகிறது.

சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் அமெரிக்க டாலரில் வாங்​கப்​படு​வ​தால், ரூபா​யின் மதிப்பு பலவீனமடை​யும் போது இறக்​கும​திச் செலவு மேலும் அதிகரிக்​கிறது.

இது பணவீக்​கம், எரிபொருள் கட்​ட​ணங்​கள் மற்​றும் ஒட்டு மொத்தப் பொருளா​தா​ரத்​தின் மீதான அழுத்​தத்தை அதிகரிக்கிறது. இதன் காரண​மாக ரூபா​யின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரு​கிறது.

ரூபாய் மதிப்பு ரூ.96க்கு வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிக​ரான ரூபா​யின் மதிப்பு கடுமையாக சரிந்து 96.14 ஆக குறைந்​தது. இது இதுவரை இல்​லாத அளவில்​ ஏற்​பட்​ட வீழ்ச்​சி​யாகும்​.

இது இந்திய பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.

இறக்குமதி செலவு அதிகரிக்கும்

ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதால், வெளிநாட்டிலிருந்து நாம் வாங்கும் எண்ணெய் முதல் பருப்பு வரை அனைத்திற்கும் கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

இது இந்தியாவிற்கு பெரிய அளவில் பொருளாதார சுமையைத் தரும்.

பணவீக்கம் அதிகரிக்கும்

எரிபொருள் விலை உயர்வதால், போக்குவரத்து செலவுகள் அதிகரித்து ஒட்டுமொத்த பணவீக்கம் (Inflation) உருவாகும்.

ஆசிய நாணயங்கள் வீழ்ச்சி

ஆசிய நாடுகளிலும் பெரும்பாலான நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பில் வீழ்ச்சி தொடர்ந்து சந்தித்து வருகின்றன. இதிலிருந்து மீள்வதற்கான வழிதான் புலப்படவில்லை.

2 ஆண்டுகளில் ரூ.100ஐ எட்டும் மதிப்பு

இதே நிலை நீடித்தால், இந்திய ரூபாயின் மதிப்பு 2027 ஆண்டின் இறுதி அல்லது 2028ம் ஆண்டு ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.100-ஐ தொட்டுவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in