Gold and Silver Rate : தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,040 சரிவு.! : வெள்ளி விலையும் குறைந்தது : இன்றைய விலை...!

ஈரான் போர் முடிவுக்கு வந்து இருக்கும் நிலையில், தங்கம் விலை ஒரே நாளில் 3 ஆயிரத்து 40 ரூபாய சரிந்து இருக்கிறது.
Iran conflict coming to an end, the price of gold has dropped by ₹3,040 in a single day
Iran conflict coming to an end, the price of gold has dropped by ₹3,040 in a single daygoogle
1 min read

தங்கம், வெள்ளி விலை

பொருளாதார மந்தநிலை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு, ஈரான் போர் காரணமாக தங்கம் விலை உச்சத்தில் உள்ளது. அதற்கு போட்டியாக வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது.

2021ம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

உச்சத்தில் தங்கம் விலை

5 ஆண்டுகளில் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. நகைகள் வாங்குவதையே நடுத்தர வர்க்க மக்கள் தவிர்த்த நிலையில், தங்கம் விலை சற்று குறைந்து, மார்ச் மாதம் சவரன் ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

போர் முடிவு - விலை சரிவு

ஆனால், ஈரான் போர் மீண்டும் விலையேற்றத்திற்கு வழி வகுத்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு, சண்டை முடிவுக்கு வந்திருப்பதால், தங்கம் விலையானது சரிய தொடங்கியுள்ளது.

அந்த வகையில் நேற்று மற்றும் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவரனுக்கு ரூ.3,040 சரிவு

தங்கம் விலை இன்று சரிந்து இருக்கிறது. வகையில் கிராமுக்கு 380 ரூபாய் குறைந்து 13,570 ரூபாய்க்கும், சவரனுக்கு 3,040 ரூபாய் சரிந்து 1,08,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்தது

வெள்ளியின் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 15 ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in