UPI : ”தினமும் 66 கோடி, விநாடிக்கு 7,600 கோடி பரிவர்த்தனை : 10 ஆண்டுகளில் 12,000 மடங்கு வளர்ச்சி! சாதிக்கும் யுபிஐ...!

இந்தியாவில் தினமும் 66 கோடி என்ற அளவுக்கு, யுபிஐ பரிவர்த்தனை நடைபெறுவது தெரிய வந்துள்ளது.
It has been revealed that UPI transactions in India amount to 660 million per day
It has been revealed that UPI transactions in India amount to 660 million per dayAI generated
2 min read

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை

India UPI Transaction Statiscs : இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக டிஜிட்டல் கட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

2025ல் ரூ. 314 கோடி பரிவர்த்தனை

கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.314 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு 24,162 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

10 ஆண்டுகள் - 12,000 மடங்கு வளர்ச்சி

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வளர்ச்சி விகிதம் 12,000 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பங்கு 49%

உலகின் மிகப்பெரிய நிகழ்நேரப் பணப்பரிவர்த்தனை அமைப்பாக இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பு விளங்குகிறது. தற்போது, உலகளவில் நடைபெறும் ஒட்டுமொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 49 சதவீதம் இந்தியாவில்தான் மேற்கொள்ளப்படுகின்றன.

அதாவது, உலகெங்கும் நடக்கும் ஒவ்வொரு இரண்டு டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் ஒன்று இந்தியாவில் நடக்கிறது.

தினமும் 66 கோடி பரிவர்த்தனை

நாள்தோறும் சராசரியாக 86,000 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 66 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. அதாவது, ஒவ்வொரு விநாடியும் 7,600-க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் ஏறக்குறைய 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

சில்லரை தட்டுப்பாடு நீக்கம்

சில்லறைத் தட்டுப்பாட்டிற்கு பணபரிவர்த்தனைக்கான யுபிஐ பயன்பாடு முற்றுபுள்ளி வைத்ததுள்ளது என்றே சொல்லலாம்.

இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த வணிகப் பரிவர்த்தனைகளில் (P2M) 86 சதவீதம், 500 ரூபாய்க்கும் குறைவான மதிப்புடையவை

மளிகை, காய்கறி கடைகள்

நாட்டின் யுபிஐ கட்டமைப்பை உயிர்ப்போடு வைத்திருப்பது மளிகை மற்றும் பல்பொருள் அங்காடிகளே ஆகும்.

2026 மே மாதம் மட்டும் சுமார் 387 கோடி பரிவர்த்தனைகள் மூலம் ரூ.85,243 கோடி பணம் பணபரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பரிவர்த்தனையின் சராசரி மதிப்பு (Average Ticket Size) ரூ.220 ஆகும்.

மே மாத வணிக பணபரிவர்த்தனையில் சுமார் சுமார் 1,472 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதில் 26.3 சதவீதம் மளிகைக் கடைகளில் நடைபெற்றுள்ளன.

அதாவது, நாட்டில் 4ல் ஒரு யு.பி.ஐ யுபிஐ பயன்பாடு மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காகவே செய்யப்படுகிறது.

பங்குச்சந்தை மற்றும் தரகர்கள், கடன் வசூல் ஏஜென்சிகள் போன்ற மாபெரும் நிதித்துறைகளைக் காட்டிலும், சாதாரண மளிகைக் கடைகளில்தான் அதிக யுபிஐ பணம் அதிகம் புழங்குகிறது.

உணவகங்களில் அதிக பரிமாற்றம்

வணிக பணபரிவர்த்தனையில் இரண்டாவது இடத்தில் உணவகங்கள் உள்ளன. மாதந்தோறும் சராசரியாக, உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில் மட்டும் யுபிஐ மூலம் 18,705 கோடி ரூபாய் மதிப்புக்கு 150 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

யுபிஐ வசதியை உணவகங்களில் செலவழிப்பதை விட 3.5 மடங்கு அதிகத் தொகையை, மக்கள் தங்கள் கடன் மற்றும் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

பெட்டிக் கடைகளில் யுபிஐ

மாதந்தோறும் சராசரியாக, சிகரெட் மற்றும் பெட்டிக்கடைகளில் மட்டும் ரூ.2,764 கோடி மதிப்புக்கு 41.8 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

இதேநிலை தொடர்ந்து நீடித்தால், பணமில்லாமல் 100% பரிமாற்றம் என்ற மைல்கல்லை இந்தியா விரைவில் எட்டி விடும்.

==========================

logo
Thamizh Alai
www.thamizhalai.in