Lava Phone : வெறும் 7499 மட்டும் தான்- லாவா வின் அடுத்த அப்டேட்!

Lava Yuva Star 3 budget smartphone launched in India : இந்திய சந்தையில், தற்போது லாவாவின் புதிய மாடலான லாவா யுவா ஸ்டார் 3 ஃபோன் அறிமுகமாகியுள்ளது.
Lava Yuva Star 3 budget smartphone launched in India Check Specification Price Features in Tamil
Lava Yuva Star 3 budget smartphone launched in India Check Specification Price Features in TamilSource : Lava Yuva Star 3 Mobile
1 min read

லாவா யுவா ஸ்டார் 3 போன் அறிமுகம்

Lava Yuva Star 3 budget smartphone launched in India : லாவா நிறுவனம் இந்திய சந்தையில் லாவா யுவா ஸ்டார் 3 என்கிற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா யுவா சீரிஸ் போனின் வரிசையில் ‘லாவா யுவா ஸ்டார் 3’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

குறைந்த விலையில் லாவாவின் அடுத்த எடிசன்

கடந்த ஆண்டு லாவா யுவா ஸ்டார் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருந்தது. தற்போது அதன் அடுத்த எடிஷன் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லாவா யுவா ஸ்டார் 3 ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் தற்போது சந்தையில் உள்ள முண்ணனி நிறுவனத்தின் ஃபோன்களை பின்னுக்கு தள்ளி குறைந்து விலையில் வலம் வருகிறது.

3 ஸ்டாரின் சிறப்பம்சம்

6.75 ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் Unisoc SC9863A சிப்செட் 4ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா 5,000mAh பேட்டரி 10 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு சப்போர்ட் யுஎஸ்பி டைப்-சி போர்ட் 4ஜி நெட்வொர்க் இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது இந்த போனின் விலை ரூ.7,499 முதல் தொடங்குகிறது,என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது. வெறும் 10 ஆயிரத்திற்குள் தற்போது சந்தையில் புழக்கத்தில் உள்ள அலைபேசிக்கு, எதிராக குறைந்து விலையில் நல்லதொரு அம்சங்களில் வெளிவந்துள்ளதால், இந்த ஃபோன் தற்போது ஸ்மார்ட்ஃபோன் பயனாளிகளுக்கு இடையில் மாபெரும் இடத்தை பிடித்து வருகிறது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in