

பணக்காரர் பட்டியலில், சரிவை சந்தித்த எலான் மஸ்க்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலக பணக்காரர் என்ற நிலையியை எட்ட இருந்த எலான் மஸ்கின் சொத்து மதிப்புகள் சரிவை சந்தித்துள்ளது , இது முதலீட்டார் வட்டாரங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது
டிரில்லியனர் அந்தஸ்தை இழந்த மஸ்க்
உலகின் நம்பர் 1 பணக்காரர் என்று அறியப்பட்ட எலான் மஸ்கின் சொத்து மதிப்பு தற்போது ணிசமாகக் குறைந்துள்ளது. இந்த கடுமையான வீழ்ச்சி காரணமாக டிரிலியனர் என்ற அந்தஸ்தை இழந்திருக்கிறார் எலான் மஸ்க்
சரிவை சந்தித்த எலான மஸ்க்கின் நிறுவனம்
எலாம் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் சரிந்த நிலையில் இது உலக பணக்காரர் என்ற முதல் வரிசையில் இருந்து பின்னுக்கு தள்ளியுள்ளது ,இது ஸ்க்குக்கு இரட்டை அடியாக அமைந்துள்ளது.
ஏஐ மீதான ஆர்வம் குறைவு, பங்குகள் சரிவு
உலக சந்தையில் AI பங்குகள் மீதான ஆர்வம் குறைந்து வருவதே ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டுள்ளது
குறைந்த சொத்து மதிப்புகள்
ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, மஸ்க் 957 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் நம்பர் 1 பணக்காரராக எலான் மஸ்க் இருந்து வந்த நிலையில் ,
கடந்த ஜூன் 12 அன்று ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் விலை உயர்ந்தபோதுதான், மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார்.
இந்த நிலையில் . ஜூன் 16 அன்று, ஒரு பங்கின் விலை 225.64 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. ஆனால், இன்று அதன் விலை 149 டாலராகக் தற்போது குறைந்து எலான் மஸ்கை பின்னுக்கு தள்ளியுள்ளது
நேரடியாக சொத்து மதிப்பை தாக்குவதற்கான காரணம்
AI துறையில் போட்டியிடத் தேவையான பெரிய முதலீடுகளை, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களால் தொடர்ந்து செய்ய முடியுமா என முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலைக்குரிய ஒன்றாக தற்போது மாறியுள்ளது
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் 38% பங்குகளையும், டெஸ்லாவில் 11% பங்குகளையும் வைத்துள்ளார். எனவே, இந்த பங்குச் சரிவு நேரடியாக அவரது சொத்து மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
===========