

தொழில் வளர்ச்சி ஸ்தம்பிப்பு, அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, இந்தியாவுடனான போர் உள்ளிட்ட காரணங்களால், பாகிஸ்தான் இதுவரை இல்லாத கடன் சுமையில் சிக்கித் தவிப்பது தெரிய வந்துள்ளது.
தீவிரவாதிகளை ஊக்குவித்து, இந்தியாவை பகைத்து கொண்ட பாகிஸ்தான் அதற்கான விலையை கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான போர் அந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளது.
அந்நாட்டு அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த உண்மை அம்பலமாகி உள்ளது.
அதன்படி, பாகிஸ்தானின் பொதுக்கடன், 76 ஆயிரத்து 7 பில்லியனை எட்டியுள்ளது. இது அந்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு கடன் சுமையாகும்.
நான்கு ஆண்டுகளில் மட்டும் பொதுக்கடன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
2020-21 நிதியாண்டில் ரூ.39,860 பில்லியனாக இருந்த பொதுக்கடன், தற்பொது வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
இதற்கான வட்டிச்சுமை எதிர்காலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று, பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உடனடி நடவடிக்கை எடுத்து சரி செய்யாவிட்டால், விலைவாசி உயர்வு, பொருளாதார பாதிப்பு பாகிஸ்தானை முடக்கி விடும் என்று தெரிகிறது.