

Gold Price Drop
நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை சரிந்து வருகிறது. ஒரு சில நாட்களில் சற்று ஏற்றம் கண்டாலும், 5 நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது.
5 நாட்களில் ரூ.5,120 சரிவு
5 நாட்களில் மட்டுமே சவரனுக்கு ரூ.5,120 குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் நேற்றைய விலை
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.12,695க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.80, சவரனுக்கு ரூ.640 குறைவு
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.12,615க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.10,325க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.82,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை 920 ரூபாய் குறைந்தால் ஒரு சவரன் 1 லட்சம் என்ற நிலைக்கு வந்து விடும். அடுத்த வாரம் முகூர்த்த நாட்கள் தொடங்கும் நிலையில், தங்கம் விலை இறக்கத்தில் இருப்பது பொதுமக்களை நிம்மதி பெருமூச்சு விடச் செய்து இருக்கிறது.
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி விலையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய தினம்
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.195க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
11 மாதங்களில் ரூ.17,000 சரிவு
இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி 11 மாதங்களில் தங்கத்தின் விலை மட்டும் சவரனுக்கு 17 ஆயிரம் ரூபாய் வரை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க மத்திய வங்கி மேற்கொண்டு வட்டி உயர்வு நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டை குறைத்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை சரிந்து ஒரு அவுன்ஸ் தங்கம் 3,878 டாலர்களாக இருக்கிறது ஒரு அவுன்ஸ் வெள்ளி 48 டாலர்களாக விலை சரிந்து விட்டது.
========================