

உலக சந்தையில் தங்கம் விலை
தங்கத்தின் மதிப்பு உலகச் சந்தையில் உயரும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரிந்து வருகிறது. இந்த சரிவின் எதிரொலி இந்தியாவிலும் எதிரொலித்தது.
தடாலடியாக அதிகரிப்பு
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை நேற்று இருமுறை தடாலடியாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் ரூ.1 லட்சத்திற்கு கீழே வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.
இரண்டு முறை விலை உயர்வு
நேற்று (ஆகஸ்ட் 5) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்த நிலையில், மதியம் மீண்டும் ரூ.960 உயர்ந்தது. இதன்படி ஒரு சவரன் ரூ.1,07,840-க்கு விற்பனையானது.
வெள்ளி விலையும் அதிகரிப்பு
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாற்றமில்லாமல் விற்பனையான வெள்ளியின் விலை நேற்று ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.240-க்கு விற்பனையானது.
தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு
தங்கநகை வாங்குவோருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,160 உயர்ந்து, ரூ.1,10,000-க்கு விற்பனையாகிறது.
ரூ.4,400 அதிகரிப்பு
ஒரு கிராம் தங்கம் ரூ.270 உயர்ந்து ரூ.13,750-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்ளில் தங்கத்தின் விலை ரூ.4,400 உயர்ந்துள்ளது.
வெள்ளி கிலோவுக்கு 10,000 உயர்வு
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து, ரூ.250-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது.
சாமானிய மக்கள் தங்கத்தை வாங்குவதற்கு சேமிப்பு மட்டுமே ஒரே வழி என்றாகி விட்டது. எனவே, நகைக் கடைகளில் மாதாந்திர நகைச் சீட்டில் பணம் சேமித்து தங்கத்தை வாங்கும் திட்டங்களுக்கு தற்போது மவுசு கூடியுள்ளது.
================
: