

சர்வதேச அளவில் தங்கம்
Gold and silver rates declined suddenly as the investors are booking profits : சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வந்தது.
தங்கம் விலை குறைந்தது
ஆனால், வாரத்தின் தொடக்க நாளான நேற்று, தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 281 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் சரிந்து, ஒரு கிலோ 2 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு ரூ.3,360 சரிவு
இந்நிலையில் இன்று (டிசம்பர் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,360 ரூபாய்ந்து சரிந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 420 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.13,746 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ரூ.10,505 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்திருப்பது மேற்கொண்டு தங்கத்தின் விலை குறையும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.23,000 சரிவு
தங்கத்தை போலவே வெள்ளியின் விலை இன்றைய தினம் சரிவடைந்து இருக்கிறது . ஒரு கிராம் வெள்ளி 23 ரூபாய் விலை குறைந்து 258 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிலோவுக்கு 23 ஆயிரம் ரூபாய் என விலை சரிந்திருக்கிறது.
அந்த வகையில் ஒரு கிலோ 2,58,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் நேற்று 281 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட
ஒரு கிராம் வெள்ளி இன்று 258 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .
உக்ரைன் ரஷ்ய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் மேற்கொண்டு விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
===================