Sovereign Gold Bonds: 5 ஆண்டுகளில் 108% லாபம் : மக்கள் வரவேற்பு

RBI on Sovereign Gold Bond Scheme Redemption Rate : ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திர முதலீடு திட்டம் மூலம் 5 ஆண்டுகளில் 108% லாபம் கிடைத்து இருக்கிறது.
RBI on Sovereign Gold Bond Scheme Redemption Rate
RBI on Sovereign Gold Bond Scheme Redemption Rate
2 min read

தங்க பத்திர சேமிப்புத் திட்டம் :

RBI on Sovereign Gold Bond Scheme Redemption Rate : தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில், மத்திய அரசு தங்க பத்திர சேமிப்பு திட்டத்தை 2015ல் அறிமுகப்படுத்தியது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் இருக்கும். எட்டு ஆண்டுகளில் தங்க பத்திரம் முதிர்வடையும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் முன்கூட்டியே திரும்ப பெறலாம்.

5 ஆண்டுகளில் 108% லாபம் ;

அதன்படி, 2020ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த திட்டத்தின் மூலம், 1 யூனிட் அதாவது 1 கிராம் தங்கம் விலை ரூ.5,117 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தங்க பத்திர முதலீட்டை முன்கூட்டியே இப்போது திரும்ப பெறலாம். இதற்கான தேதியை நிர்ணயித்த ரிசர்வ் வங்கி, ஒரு யூனிட் விலையை ரூ.10,610 ஆக நிர்ணயித்து உள்ளது.

தங்க பத்திரம் முதலீடு அதிகரிப்பு ;

108 Percent Returns on SGB Gold Bond Schemes : அதன்படி, ஐந்து ஆண்டுகளில் 108% லாபத்தைக் கொடுத்துள்ளது. ஆண்டுக்கு 2.75 சதவீதம் வட்டியும் கொடுக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கத்தை நகைகளாக வாங்குவதற்கு பதிலாக தங்க பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்க இறக்குமதியும் கணிசமாக குறைந்து இருக்கிறது.

147 டன் தங்கத்திற்கு இணையான முதலீடு ;

இதுவரை மத்திய அரசு 147 டன் தங்கத்துக்கு சமமான தங்க பத்திரங்களை வெளியிட்டுள்ளது. முதிர்ச்சியடைந்த தொடர்கள் 12.6% முதல் 19% வரை வருமானம் அளித்துள்ளன, குறிப்பாக முன்கூட்டியே வெளியேறியவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. இது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது, மேலும் தங்கத்தின் விலை உயரும்போது நல்ல லாபம் கிடைக்கிறது.

தங்க பத்திர முதலீடு - தெரிந்து கொள்ளுங்கள்

1. சாவரின் கோல்ட் பாண்ட்ஸ் ( Sovereign Gold Bonds) நவம்பர் 2015ல் தொடங்கப்பட்டது. இதுவரை 67 தவணைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

2. இந்த பத்திரங்கள் எட்டு வருடங்களில் முதிர்ச்சியடையும். ஐந்து வருட நிறைவில் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி உள்ளது.

3. கூடுதல் வட்டி விகிதம் மற்றும் முதிர்ச்சியின்போது வரி விலக்கு போன்ற காரணங்களால், இது மற்ற தங்க முதலீட்டுத் திட்டங்களை விட சிறந்தது.

4. சமீபத்தில் முடிவு பெற்ற 9 சவரன் தங்கப் பத்திர திட்டங்கள், 12.6 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை வருமானத்தை அளித்துள்ளன.

5. ரிசர்வ் வங்கியின் முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதியை பயன்படுத்திய நுகர்வோர்கள் 19.4 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை வருமானம் பெற்றுள்ளனர்.

6. சாவரின் கோல்ட் பாண்ட்ஸ் தங்க முதலீட்டு நிதிகளை விட அதிக லாபம் தருவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

7. சாவரின் கோல்ட் பாண்ட்ஸ் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டு விருப்பமாக உள்ளது.

8. சாவரின் கோல்ட் பாண்ட்ஸ் மூலம் கிடைக்கும் நன்மை :

* தங்கம் விலை உயரும்போது லாபம்

* ஆண்டுதோறும் நிலையான வட்டி வருமானம்

* முதிர்ச்சியின்போது வரி விலக்கு

* மிகவும் பாதுகாப்பான முதலீடு

====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in