

சீனாவின் ரியல்மி நிறுவனம்
Realme 16T Launched in India With 50-Megapixel Main Camera, 8,000mAh Battery : உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வருகிறது சீனாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம்.
புதிய அப்பேட்களுடன் ஸ்மார்ட் போன்கள்
அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.
ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்ட ரியல்மி, இப்போது பின்னர் தனியொரு பிராண்டாக விற்பனையில் கொடிகட்டி பறக்கிறது.
16 சீரிஸ் போன்கள்
இந்தநிலையில், ரியல்மி நிறுவனம், 16 சீரிஸ் போன்களின் வரிசையில் ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய மாடலான ரியல்மி 16 போனில் இருப்பது போலவே இந்த போனின் பின்பக்கத்திலும் இடம்பெற்றுள்ள செல்ஃபி மிர்ரர் (Mirror) இடம்பெற்றுள்ளது.
இதன் பேட்டரி, சிப்செட் உள்ளிட்டவையும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
ரியல்மி 16டி ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள்
* 6.8 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
* மீடியாடெக் டிரான்சிட்டி 6300 சிப்செட்
* ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
* 6ஜிபி, 8ஜிபி ரேம்
* 128ஜிபி, 256ஜிபி ஸ்டோரேஜ்
* 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
* 50 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமரா
* கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு என மூன்று வண்ணங்களில் விற்பனை
* 8000 mAh பேட்டரி
* 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
* 15 வாட்ஸ் ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
* யுஎஸ்பி டைப்-சி போர்ட்
* 5ஜி நெட்வொர்க்
* அறிமுக விலை ரூ.29,999
====================