”ரூ.2,000 இப்போதும் செல்லும்” : மாற்ற வாய்ப்பு தரும் ரிசர்வ் வங்கி, முக்கிய அறிவிப்பு வெளியீடு...!

பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள ரிசர்வ் வங்கி மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
Reserve Bank has once again provided an opportunity for the public to exchange the ₹2,000 notes they hold
Reserve Bank has once again provided an opportunity for the public to exchange the ₹2,000 notes they holdAI generated
1 min read

திரும்ப பெறப்பட்ட ரூ.2,000

Reserve Bank of India : கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

அப்போது நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது.

புழக்கத்தில் ரூ.5,451 கோடி

திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து 2026 ஏப்ரல் 30 நிலவரப்படி ரூ.5,451 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே பொதுமக்களிடம் உள்ளன.

98% நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன

அப்படி என்றால், இதுவரை 98.47 சதவிகித ரூ.2000 நோட்டுகள் ரிசரவ் வங்கிக்கு திரும்ப வந்துள்ளது. தற்போது பொதுமக்களிடம் ரூ.2,000 இருந்தால், அதை எந்த வங்கியிலும் கொண்டு சென்று மாற்ற முடியாது.

ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தநிலையில் மக்களிடம் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள, ரிசரவ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கிளை அலுவலகங்களில் மாற்றலாம்

அதன்படி, ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலங்களிலும் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அலுவலகங்கள் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவர்களது வங்கி கணக்கில் ரூ.2000 நோட்டுகளை சேமிப்பு கணக்கில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தபாலிலும் ரூ.2,000 நோட்டுகளை அனுப்பலாம்

இது தவிர இந்தியாவில் எந்தவொரு தபால் நிலையத்தில் இருந்து இந்தியா போஸ்ட் மூலம் ரூ.2000 நோட்டுகளை அனுப்பி தங்கள் சேமி்ப்பு கணக்கில் அந்தத் தொகையை வரவு வைத்துக்கொள்ளும் வசதியை ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி தந்து இருக்கிறது.

இந்த நடவடிக்கை மூலம் மக்களிடம் மிச்சமாக இருக்கும் 2,000 தாள்கள் அனைத்தும் வங்கியை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

====================================

logo
Thamizh Alai
www.thamizhalai.in