

அதிரடி காட்டும் தங்கம்
Gold Rate Today in Chennai : 2026ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து அதிரடி காட்டி வருகிறது. தினமும் சிறுகச் சிறுக அதிகரித்து வந்த தங்கம் விலை, சில நாட்களாக அதிரடியாக உயர்வு கண்டு அச்சுறுத்துகிறது. இதில் புதிய உச்சமாக தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.15,000ஐ கடந்தது.
சர்வதேச பிரச்னைகளே காரணம்
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர உலகளாவிய பிரச்னைகள் முக்கிய காரணங்களாக உள்ளன.
ஈரான், வெனிசுலாவில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் நீடிப்பது, உலகப் பொருளாதாரத்தில் தாக்கியத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.14,960க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,680க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சவரனுக்கு ரூ.2,960 அதிகரிப்பு
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், அதிரடியாக உயர்ந்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.370 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,330க்கும், சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,22,640க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பிற்பகலிலும் உயர்ந்த தங்கம்
இந்தநிலையில் இன்று பிற்பகல் தங்கம் விலை 2வது முறையாக அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. அதாவது சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ரூ.1,24,880க்கும், கிராமுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.15,610க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் ரூ.5,200 அதிகரிப்பு
அந்தவகையில், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதன்மூலம் சவரன் ஒன்றே கால் லட்சத்தை எட்டுகிறது தங்கம்.
அதேபோல், 18 கிராம் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்து ரூ.1,04,200க்கும், கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.13.025க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிலோ கிலோ ரூ.4 லட்சம்
வெள்ளி விலையில் பிற்பகலில் மாற்றம் இல்லா விட்டாலும், இன்று காலை கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.400க்கும், கிலோவுக்கு 13,000 உயர்ந்து 4 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வரலாற்றில் வெள்ளி விலை 4 லட்சம் ரூபாயை எட்டியது இதுவே முதன்முறை.
==============