ஈரான் இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகள் மட்டுமின்றி திருப்பூர் ,கோவை பின்னலாடை ஏற்றுமதியிலும் பாதிப்பு

தொடர்ந்து 5 வது நாளாக நீடித்து வரும் ஈரான் இஸ்ரேல் போரால் ஏற்றுமதி இறக்குமதிக்கான அனைத்து வழிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ,திருப்பூர்,கோவை பின்னலாடை ஏற்றுமதியானது தேங்கி உள்ளது
The Iran-Israel war affected not only the Gulf countriesthe garments exports of Tiruppur and Coimbatore.
The Iran-Israel war affected not only the Gulf countriesthe garments exports of Tiruppur and Coimbatore. google
2 min read

ஈரான் இஸ்ரேல் மோதல்

Iran Israel War Impact on India : ஈரான் இஸ்ரேல் அமெரிக்க நீடித்து வரும் போரால் ஈரானின் ‘ரெட் க்ரெசன்ட் சொசைட்டி’ (Red Crescent Society) (மார்ச் 2, 2026) வெளியிட்ட அறிக்கையின் படி ‘இஸ்லாமியக் குடியரசான ஈரானை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 555 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்புள்ளாகும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போரானது நீடித்து வருவதால் பல்வேறு துறைகளின் ஏற்றுமதி மாறும் இறக்குமதியானது பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது .

மூடப்பட்ட வழித்தடங்கள்

போர் எதிராளியின் காரணமாக வான் எல்லைகள் மூடப்பட்டு, துபாய், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் வான்வழி போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.

குறிப்பாக கோவை விமான நிலையத்திலும் கடந்த 4 நாட்களாக ஷார்ஜா, அபுதாபி இடையே விமான போக்குவரத்து தடைபட்டிருப்பதால், தொழில்துறை பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளது.

ஏற்றுமதி சரிவு குறித்து தொழில் துறையினர் கூறியது

கோவையில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வழக்கமாக தங்க நகைகள், ஜவுளி மற்றும் ஜவுளி இயந்திரங்கள், மோட்டார் பம்ப் மற்றும் வேளாண் பொருட்களும், திருப்பூரில் இருந்து பின்னலாடைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன .

அதுபோலவே கோவையில் இருந்து சிங்கப்பூர், அபுதாபி, ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன .

போர் காரணமாக விமான சேவை மட்டுமின்றி, கடல்வழி போக்குவரத்தும் பாதிக்கப்பட தொடங்கியிருப்பதுதான் கோவை, திருப்பூர் தொழில்துறையினரின் தற்போதைய பெரும் கவலையாக உள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி மையமாக செயல்படும் துபாய்

இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் சரக்குகள் அனைத்தும் தூத்துக்குடி துறைமுகம் வழியாக துபாய் சென்று அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வான்வழி சரக்கு அனுப்புவது கூடுதல் செலவு என்பதால், அதில் ஏற்றுமதி மிகவும் சொற்பமாகவே நடைபெறும் .

இத்தகைய சூழலில் கடல்வழிப் பாதைதான் ஏற்றுமதியில் முக்கிய பங்கை வகிக்கிறது. போர் காரணமாக கடல்வழிப் பாதையில் உள்ள வளைகுடா நாடுகளான துபாய், கத்தார் மற்றும் தோஹாவுக்கு கப்பல்கள் செல்ல முடியாத நிலை இருப்பதால் ஏற்றுமதியானது பாதிக்கப்ட்டுள்ளது ,

மூடப்பட்டுள்ள முக்கிய வழித்தடம்

போரின் எதிரொலி காரணமாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்துள்ளது. மீறி அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரானின் IRGC பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.ஆதலால் இந்த பாதை வழியாக எந்த கப்பலும் செல்ல அனுமதியானது தற்போது மறுக்கப்பட்டுள்ளது.

பாதிப்பை சந்திக்கும் ஏற்றுமதியாளர்கள்

நீடித்து வரும் போரால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில் ஒரு கண்டெய்னருக்கு 1500 டாலர் தொடங்கி 3500 டாலர் வரை, அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கூடுதல் செலவாகிறது. இது 20 முதல் 50 சதவீத போக்குவரத்து செலவை ஏற்படுத்தும்

மேலும், துபாய் போன்ற முக்கிய விமான நிலையங்கள், துறைமுகத்தில் செயல்பாடுகள் குறைந்துவிட்டதால், ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகளும் தேக்கமடைந்துள்ளதாகவும் பெரும் கவலையுடன் தெரிவித்தனர் .

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in