1 லட்சத்து 20 ஆயிரம் எகிறிய தங்கம் : விரக்தியில் பொதுமக்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,20,200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Gold price surges by 120,000 - the public is frustrated!
Gold price surges by 120,000 - the public is frustrated!google
1 min read

உச்சத்தை தொடும் தங்கம் விலை

gold rate today சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேரம், பொழுதுகள் பார்க்காமல் இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது.

அச்சுறுத்தும் தங்கம் விலை

இதனால் சுபநிகழ்ச்சிகளில் இருந்து தனது சுயத்திற்கு வரை தங்கம் வாங்க நினைப்போருக்கு தங்கம் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சவரன் ரூ.1,20,000

2025 ஆம் ஆயிரம் ஆரம்பத்தில் 1 சவரன் 60, 70 ஆயிரம் என இருந்த விலை. தற்போது, கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,025-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியும் புதிய உச்சம்

இதன் மூலம் தங்கம் புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 375 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

நாட்டின் 77 வது குடியரசு தின விழா: சிதம்பரம் கோவில் ராஜ கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி

25-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

24-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

23-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,400

22-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

21-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,320

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

25-1-2026- ஒரு கிராம் ரூ.65

24-1-2026- ஒரு கிராம் ரூ.365

23-1-2026- ஒரு கிராம் ரூ.345

22-1-2026- ஒரு கிராம் ரூ.340

21-1-2026- ஒரு கிராம் ரூ.345

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in