உச்சத்தில் தேசியக்கொடி : ஹோர்முஸ் நீரிணையை கடந்த 3 இந்திய கப்பல்கள்! : 8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் வருகை...

8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய்யுடன், ஹோர்முஸ் நீரிணையை கடந்து மூன்று எண்ணெய் கப்பல்கள் இந்தியாவுக்கு வருகின்றன.
Three oil tankers carrying 8.6 lakh tonnes of crude oil are heading to India via the Strait of Hormuz
Three oil tankers carrying 8.6 lakh tonnes of crude oil are heading to India via the Strait of Hormuzgoogle
1 min read

ஈரான் போர்

அமெரிக்கா - ஈரான் இடையி​லான போர் கடந்த பிப்​ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. பதிலடி கொடுத்த ஈரான், தனது கடல் பகு​தி​யில் உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​க்கு சீல் வைத்தது.

உச்சத்தில் கச்சா எண்ணெய்

இதனால் உலக அளவில் 25% அளவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் ஸ்தம்பித்தது. விலையும் 150 டாலர் வரை உயர உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.

முடிவுக்கு வந்த போர்

இந்​நிலை​யில், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்​பந்தம் சில நாட்​களுக்கு முன்னர் கையெழுத்​தானது. இதையடுத்து அடுத்த 60 நாட்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சுதந்​திரமாகக் கப்​பல்​கள் செல்​லலாம் என்று ஈரான் அறி​வித்​தது.

பத்திரமாக கடந்த இந்திய கப்பல்கள்

இந்​நிலை​யில், இந்​திய தேசி​யக் கொடி ஏற்​றிய தேஷ் வைபவ், தேஷ் விபார், சன்​மார் ஹெரால்டு ஆகிய 3 கப்​பல்​கள் ஒரே நாளில் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​தன.

8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய்

மொத்​தம் 8.6 லட்​சம் டன் கச்சா எண்​ணெய் ஏற்​றிக் கொண்டு அந்​தக் கப்​பல்​கள் பாது​காப்​பாக ஜலசந்​தியை கடந்​துள்​ளன. இருதரப்​புக்​கும் இடை​யில் போர் தொடங்​கிய பிறகு, இந்​திய தேசி​யக் கொடி​யுடன் ஒரே நாளில் 3 கப்​பல்​கள் கடந்​துள்​ளது இதுவே முதல் முறை.

இந்த கப்​பல்​களை​யும் சேர்த்து இது​வரை 13 இந்​தி​யக் கப்​பல்​கள், 5 வெளி​நாட்டு கப்​பல்​கள்ஹோர்​முஸ் ஜலசந்​தியை கடந்​துள்​ளன.

கடல் பாதுகாப்புக்கு முன்னுரிமை

இதுகுறித்து மத்​திய கப்​பல் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சர்​வானந்த சோனோவல் கூறும்​போது, ‘‘இந்​திய தேசி​யக் கொடி ஏற்​றிய அந்த 3 கப்​பல்​களி​லும் மொத்​தம் 94 இந்​தி​யர்​கள் பணிபுரி​கின்​றனர். கடல் பாது​காப்​பு, இந்​திய மாலுமிகளின் பாது​காப்​புக்கு மத்​திய அரசு அதிக முன்​னுரிமை அளித்து வரு​கிறது’’ என்​றார்.

காத்திருக்கும் 2 கப்பல்கள்

இந்​தக் கப்​பல்கள் இந்தியாவில் உள்ள துறைமுகங்களை அடுத்தடுத்து வந்தடையும். இதற்​கிடை​யில், எஸ்​எஸ்​எல் காவேரி, தேஷ் சுரக் ஷா ஆகிய 2 இந்தி​யக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடக்க காத்திருக்கின்றன

15 கப்பல்களில் கச்சா எண்ணெய்

இந்​தி​யா​வுக்கு வரவேண்​டிய 31 கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் காத்​திருக்​கின்​றன. அந்​தக் கப்​பல்​களும் ஒவ்​வொன்​றாக ஹோர்முஸ்​ ஜலசந்​தி​யைக்​ கடந்​து வரும்​ என்​று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்​றில் 16 கப்​பல்​களில் உரங்கள் உள்​ளன.

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in