வாரத்தின் முதல் நாள் : உச்சம் தொட்ட தங்கம் விலை

Today Gold and Silver Price increased in Chennai : வாரத்தின் முதல நாளே தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1840 அதிகரித்துள்ளது .
Today Gold and Silver Price increased in Chennai Check Todays 09 02 2026 Current Gold Rate in Tamil
Today Gold and Silver Price increased in Chennai Check Todays 09 02 2026 Current Gold Rate in Tamilgoogle
1 min read

விலைக்கான நிர்ணயம்

Today Gold and Silver Price Decreased in Chennai:

சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா யின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று உச்சத்தை எட்டியுள்ளது .

நகைப்பிரியர்களின் எதிர்பார்ப்பு

கடந்த ஜன.30, 31 தேதிகளிலும், பிப் 2-ம் தேதியும் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கி வாடிக்கையாளர்களை மன ஆறுதலை அளித்திருந்த நிலையில் பிப் 7 அன்று விலை அதிகரித்திருந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே உச்சத்தை எட்டியிருக்கிறது .

இன்றைய தங்கம் விலை

பிப் 7 அதிகரித்திருந்த தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்துள்ளது.பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது .

வெள்ளி விலை உயர்வு

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.பிப் 7 அதிகரித்திருந்த நிலையில் இன்றும் உச்சத்தை எட்டியிருக்கிறது.

கிரா​முக்கு ரூ.15 உயர்ந்து, ரூ.300-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து, ரூ.3,00,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.20 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.6,091-க்கு விற்பனை செய்யப்படுகிறது .

நேற்று முன்தினம் தங்கம் மற்றும் வெள்ளயின் நிலவரம்

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.14,420-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்பட்டது .

வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.285-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in