

தங்கம் விலைக்கான நிர்ணயம்:
Today Gold and Silver Price Increased in Chennai: : சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களை கடந்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2080 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 1,17,440க்கு விற்பனையாகிறது.
ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை
கடந்த 10 ஆம் தேதி வரை தங்கம் விலை ஏற்றத்திலேயே இருந்த நிலையில் அதற்குப் பிறகான நாட்களில் சற்று விலை குறையத் தொடங்கி மீண்டும் தற்போது விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்றைய தங்கம் விலை
நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ. 14,420க்கும் 1 சவரனுக்கு ரூ. 640 குறைந்து ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ. 1,15,360 க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 260 உயர்ந்து 1 கிராம் ரூ. 14,680, 1 சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2080 அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,17,440க்கு விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை
தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் இன்று அதிகரித்து உள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ. 290 க்கும், 1 கிலோ வெள்ளி ரூ. 2,90,000 க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:
14 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,16,480
15 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,16,480
16 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,15,520
17 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,14,560
18 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,13,840
19 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,16,000
20 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,15,360