

தங்கம் விலைக்கான நிர்ணயம்:
Today Gold and Silver Price Increased in Chennai : சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.
தங்கம் விலை ஏற்ற இறக்கம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகரிப்பதும் ,குறைவதுமாகவே இருந்து வருகிறது. ஒருநாள் 1000, 2000 ரூபாய்க்கு மேல் அதிகரிப்பதும் திடீரென குறைவதுமாக இருந்து வருகிறது.
நேற்றைய தங்கம் விலை
நேற்று தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 14,900 என்றும், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,19,200 என்றும் விற்பனையானது.
இந்நிலையில் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான இன்று , காலையிலேயே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கம் விலை
அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,200 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.2400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,21,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கம் விலை
அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 16,582 ஆகவும், ஒரு சவரன் ரூ,1,32,656ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் தான் விலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது வெள்ளி விலையாவது ஏறாமல் இருக்கிறதா என்றால் வெள்ளி விலையும் தங்கத்தோடு போட்டி போட்டுக்கொண்டு ஏறுகிறது.
இன்றைய வெள்ளி விலை
அதன்படி இன்று ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 300 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,00,000 திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இரண்டாவது முறையாக தங்கம் விலை அதிகரிப்பு
இன்று இரண்டாவது முறையாக மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.15,550 க்கும், சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,24,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரு நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5200 உயர்ந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளி விலையும் உயர்வு
தங்கம் விலை உயர்வைத் தொடர்ந்து இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக வெள்ளி விலையும் மீண்டும் உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கும், பார் வெள்ளி ரூ.3,20,000 மாக விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வெள்ளி தினம் தினம் ஏற்ற இறக்கங்களை கண்டு வருகிறது .
எனினும் நகைக்கடைகளில் கூட்டம் மட்டும் அப்படியே தான் இருக்கிறது. இதில் நடுத்தர மக்கள் தான் திண்டாடுகிறார்கள் என்றே சொல்லலாம்.
கடந்த ஏழு நாட்களில் தங்கம் விலை கடந்து வந்த பாதை:
22 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,17,440
23 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,18,880
24-ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,19,120
25 -ஆம் தேதி 1 சவரன் - ரூ. 1,19,440
26 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,19,320
27 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,19,200
28 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,21,600 (இன்று)
28 -ஆம் தேதி 1 சவரன் - ரூ.1,24,400 (இன்று இரண்டாவது முறையாக விலை அதிகரிப்பு)