ITR filing : வருமான வரி தாக்கல் “இன்றே கடைசி நாள்” : செய்யா விட்டால் என்ன ஆகும்? முழு விவரம்.!

வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று, அவ்வாறு முடிக்காவிட்டால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
Today is the last day to file income tax returns
Today is the last day to file income tax returnsAI generated
2 min read

வருமான வரி தாக்கல் இன்றே கடைசி நாள்

2026-27 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை (ITR) இன்னும் தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர் உடனே அதை முடிக்க வேண்டும். ஏனெனில், சம்பளம் பெறும் தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய இன்று தான் ( ஜூலை 31 ) கடைசி நாளாகும்.

ITR தாக்கல்

ஒருவருடைய வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை (basic exemption limit) தாண்டினால் ITR தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

ரூ. 4 லட்சம் வரை வரி விலக்கு

பழைய வரி முறையில் ரூ. 2.5 லட்சம் வரை வருமானத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய வரி முறையில் ரூ. 4 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.

சில சமயங்களில், வருமானம் இந்த வரம்புகளுக்குக் குறைவாக இருந்தாலும் தாக்கல் செய்வது கட்டாயமாக இருக்கும். காரணம், அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தி இருக்கலாம், வெளிநாட்டுப் பயணச் செலவுகள் போன்றவை வருமானத்தை விட அதிகமாக இருக்கும் போது, வரி தாக்கல் செய்வது அவசியமாகிறது.

தாமதக் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்பு

வருமான வரியைத் தாக்கல் செய்யத் தவறினால் வரி செலுத்துவோர் டிசம்பர் 31 வரை 'தாமதமான வருமான வரி கணக்கை' (belated return) தாக்கல் செய்யலாம்.

ஆனால், இதற்காக ரூ. 5,000 வரை தாமதக் கட்டணம் விதிக்கப்படலாம்.

ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ள தனிநபர்களுக்கு இந்தக் கட்டணம் 1000 ரூபாயாக இருக்கும்.

தாமதக் கட்டணம் எவ்வளவு இருக்கும்

12 மாதங்கள் வரை - 25 %

12 மாதங்களுக்குப் பிறகு 24 மாதங்களுக்கு முன் - 50 %

24 மாதங்களுக்குப் பிறகு 36 மாதங்களுக்கு முன் - 60 %

36 மாதங்களுக்குப் பிறகு 48 மாதங்களுக்கு முன் - 70 %

தாமதமாகத் தாக்கல் செய்வதால் பாதிப்புகள்

தாமதமாக வரி கணக்கை தாக்கல் செய்வது முக்கியமான வரிச் சலுகைகளை இழக்கச் செய்யலாம். சில வகையான இழப்புகளை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல (carry forward) முடியாது.

பழைய மற்றும் புதிய வரி முறைகளுக்கு இடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் வரி செலுத்துவோர் இழக்க நேரிடலாம்.

ஏனெனில், தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் கணக்குகள் பொதுவாகப் புதிய வரி முறையின் கீழ் பரிசீலிக்கப்படுகின்றன.

கூடுதல் வரி எப்போது செலுத்துவது

வரி செலுத்துவோர் தங்களின் அசல் அல்லது தாமதமான வருமான வரிக் கணக்குகளை 2027 மார்ச் 31 வரை உரிய கட்டணங்களைச் செலுத்தி திருத்தித் தாக்கல் செய்ய நிதிச் சட்டம்-2026 அனுமதிக்கிறது.

தாக்கல் செய்யத் தவறியவர்கள் தாமதத்தின் அடிப்படையில் கூடுதல் வரியைச் செலுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் 'புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை' (ITR-U) தாக்கல் செய்யலாம்.

வருமான வரித்துறை நோட்டீஸ்

சட்டப்படி, சரியான தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தவறினால் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரும்.

TDS பணத்தைத் திரும்பப் பெறுவதில் இழப்பு, மறுமதிப்பீட்டு நடவடிக்கைகள், அபராதம் மற்றும் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம்.

வெளிநாட்டுச் சொத்துகளை வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் அவர்களுக்கு வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாவிட்டாலும், வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.

இல்லையென்றால் கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in