ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை
தங்த்தின் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது . இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ளது
மாதத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை
மே மாதம் முதல் நாளான நேற்று மட்டுமே தங்கம் விலை 2 முறை மாற்றம் செய்யப்பட்டது. காலை, மாலை என 2 வேளையுமே தங்கம் விலை அதிரடியாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை
நேற்று மாலை நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து, ரூ.1,11,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து, ரூ.13,920க்கு விற்பனை செய்யப்பட்ட்டது.
இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,000க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.112,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,680க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது
வெள்ளி விலையும் உயர்வு
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
===========