ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போரால் எகிறிய கச்சா எண்ணெய் : பீப்பாய் 93 டாலர், 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

அமெரிக்கா - ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையாக உயர்ந்துள்ளது.
 US-Iran war has caused crude oil prices to rise sharply to their highest level in 2 years
US-Iran war has caused crude oil prices to rise sharply to their highest level in 2 yearsgoogle
1 min read

8-வது நாளாக கடும் போர்

Oil prices surge as West Asia conflict rages, stocks fall on U.S. jobs ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்தி வரும் கொடூர தாக்குதல் 8வது நாளாக நீடிக்கிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருவதால், வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நீடிக்கிறது.

தவிக்கும் கச்சா எண்ணெய் கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை மூடி ஈரான் மூடி இருப்பதால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. 700க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள் வளைகுடா நாடுகளில் நங்கூரமிட்டுள்ளன.

ஈரான் தாக்குதல் - தட்டுப்பாடு அபாயம்

எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது.

பீப்பாய் எண்ணெய் 93 டாலர்கள்

இந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. ஒரு பீப்பாய்க்கு 9 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய் விலை 93 அமெரிக்க டாலராக உள்ளது.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு

20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உற்பத்தியை நிறுத்தும் வளைகுடா நாடுகள்

போரால் வளைகுடா நாடுகள் எண்ணெய் உற்பத்தியை இரண்டு நாட்களில் நிறுத்தக் கூடும் என கத்தார் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

150 டாலராக உயரும் அபாயம்

இதனிடையே ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு இருந்தால் கச்சா எண்ணெய் விலை, அடுத்த 3 வாரங்களுக்குள் $150 வரை உயரக்கூடும் என கத்தார் அரசு எச்சரித்து இருக்கிறது.

ஈரான் மீதான தாக்குதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் கணிப்பும், கச்சா எண்ணெய் விலையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in