World Gold Council predictions sounded the alarm, warning that gold prices will reach 2 lakhs by end of year 2026
World Gold Council predictions sounded the alarm, warning that gold prices will reach 2 lakhs by end of year 2026Google

2026க்குள் தங்கம் விலை 2 லட்சம்: பகீர் கிளப்பும் தங்க கவுன்சில்!

World Gold Council Predictions Gold Rate at End Of Year 2026 : தங்கம் விலை 2026 இறுதிக்குள் 2 லட்சத்தை தொடும் என்று, உலக தங்க கவுன்சில் எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறது.
Published on

குடும்பங்களின் முதலீடு தங்கம்

World Gold Council Predictions Gold Rate at End Of Year 2026 : 2025ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இந்திய குடும்பங்களில் தங்கத்திற்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. நகைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பது இங்கு ஒரு மரபாகவே உள்ளது. ஒரு காலத்தில் வெறும் ஆபரணமாக பார்க்கப்பட்ட தங்கம் காலப்போக்கில் முதலீடாக மாறி விட்டது.

குடும்பங்களிடம் உள்ள தங்கம் 34,600 டன்

இந்திய குடும்பங்களில் பல தலைமுறைகளாக சேகரிக்கப்பட்டுள்ள தங்கத்தின் இருப்பு 34,600 டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது தங்க நகைகளின் மதிப்பு 3.8 லட்சம் கோடி டாலராக உள்ளது என உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

ஒரு லட்சத்தை தொட்ட தங்கம்

இந்த நிலையில் தங்கம் விலை கடந்த வாரம் சவரன் 1 லட்சத்தை தாண்டியது. பின்னர் சற்று இறக்கம் கண்ட தங்கம், 99 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. புத்தாண்டுக்குள் இது ஏறலாம் அல்லது சற்று இறங்கி வரலாம்.

2026ல் ஜெட் வேகத்தில் தங்கம்

இந்நிலையில் உலக தங்க கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) டேவிட் டெயிட், தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தங்கம் விலை அடுத்த ஆண்டு மேலும் உயரக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.

டாலர் மதிப்பின்படி, ஒரு அவுன்ஸ் (28.3 கிராம்) தங்கம் சுமார் ரூ.5.40 லட்சத்துக்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது.

10 கிராம் 2 லட்சத்தை தொடும்

இந்தியாவை பொறுத்தவரை 10 கிராம் கொண்ட 24 கேரட் தங்கத்தின் மதிப்பு ரூ.2,00,000 வரை உயர வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 2024 ஆண்டிலும், தங்கம் விலை 2025க்குள் ஒரு லட்சத்தை தாண்டும் என்று உலக தங்க கவுன்சில் கணித்தது. அதன்படியே தங்கத்தின் விலை உயர்ந்து இருக்கிறது.

தங்கத்தை குவிக்கும் நாடுகள்

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் பண இருப்புக்கு மாற்றாக தங்கத்தை அதிக அளவில் வாங்கி சேமித்து வருகின்றன. குறிப்பாக சீன அரசு தங்கத்தை வாங்கி சேர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. தங்கத்திற்கான விதிகளை சீன அரசு தளர்த்தி உள்ளது. ஜப்பானிலும் பணவீக்கம் காரணமாக தங்கத்தில் அதிக முதலீடுகள் செய்யப்படுகிறது.

தங்கமே பாதுகாப்பான முதலீடு

உலக அளவில் நிதி நிலையற்ற தன்மை நிவுவதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதுமே இதற்கு காரணம் என்று டேவிட் டெயிட் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை இறங்குமா?

அமெரிக்க பொருளாதாரம் மிக வேகமாக முன்னேற்றத்தை கண்டால் அல்லது உலகில் போர்ப்பதற்றங்கள் முற்றிலும் தணிந்தால் தங்கத்தின் விலையில் லேசான மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. 2026 அதற்கான சூழல் இருக்கிறதா என்றால், அதற்கான பதில் உலக நாடுகளிடம் இல்லை.

எனவே, விலையேற்றத்தை தடுக்க முடியாது என்பது தான் தற்போதைய பதிலாக இருக்கிறது.

====================

logo
Thamizh Alai
www.thamizhalai.in