ஜோஹோவில் காலிப்பணியிடங்கள் : தகுதியானோர் முந்துங்கள்!

ZOHO Job Vacancy Openings in Chennai : பிரபல மென்பொருள் நிறுவனமான, ஜோஹோவில் யூசர் எக்ஸ்பிரியன்ஸ் டிசைனருக்கான காலிப்பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ZOHO Job Vacancy Announcement for User Experience Designer at popular software company ZOHO Corporation
ZOHO Job Vacancy Announcement for User Experience Designer at popular software company ZOHO CorporationSource : ZOHO Logo
1 min read

ஜோஹோவில் காலிப்பணியிடம்

ZOHO Job Vacancy Openings in Chennai : தமிழகத்தில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

தற்போது சென்னையில் உள்ள ஜோஹோ அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

யூசர் எக்ஸ்பிரியன்ஸ் டிசைனர் காலிப்பணியிடம்

ஜோஹோவில் இருந்து தொடர்ந்து வெளிவரும் வேலைவாய்ப்புகளில், தற்போது குறிப்பாக யூசர் எக்ஸ்பிரியன்ஸ் டிசைனர் (User Experience Designer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான காலிப்பணியிடம் அறிவிப்பு வெளிவிந்துள்ளது.

தகுதி வரம்பு

Bachelor in Design, HCI அல்லது அதுசார்ந்த பிரிவுகளில் அனுபவம் கொண்டர்வர்களும் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாகவிண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டு வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆங்கிலம் தெரிய வேண்டும் அதேபோல் விண்ணப்பம் செய்வோர் Figma, Adobe XD அல்லது அதேபோன்ற டூல்ஸ்களில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

இதுதவிர பிரச்னைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இது முழுக்க முழுக்க UX Design பிரிவுக்கான பணியாகும்.

இதனால் அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பணி அனுபவம் திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம்.

எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது ஒரு அரிய வாயப்பு என்பதால், அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in