டிஜிட்டல் பணபரிவர்த்தணையிலும் இனி ஜோஹோ! GPay, PhonePe கிடையாதா?

ஜோஹோவின் வளர்ச்சி அதன் தயாரிப்புகளான அரட்டை, உலா என மேட் இன் இந்தியா என்னும் வார்த்தையை சாதனையாக மாற்றி வருகிறது. இதனைதொடர்ந்து டிஜிட்டல் பணபரிவர்த்தணையிலும் ஜோஹோ (POS), என்று காலடி பதித்துள்ளது.
ZOHO Launch Digital Payments POS Device Machine Code GPay, PhonePe Are No Longer Avalaible
ZOHO Launch Digital Payments POS Device Machine Code GPay, PhonePe Are No Longer Avalaible
2 min read

ஜோஹோவின் POS :

ZOHO Launch Payments POS Device Machine : இந்திய டிஜிட்டல் கட்டணச் சந்தையில் தற்போது GPay, PhonePe, Paytm போன்ற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றுக்குச் சவால் விடும் வகையில், ஜோஹோ (Zoho) நிறுவனம் நெட்வொர்க், சமூக செயலிகளை தொடர்ந்து வணிக முயற்சியிலும் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில், ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு (Sridhar Vembu) தனது X தளத்தில் POS (Point of Sale) சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த சாதனங்கள் வணிகங்கள் நேரில் பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள உதவும் என்று தெரிவித்துள்ளார்.

அரட்டையுடன் இணைக்கப்படும் Zoho Pay

ஸ்ரீதர் வேம்பு ஒரு முக்கியமான தகவலையும் வெளியிட்டார்.நிறுவனத்தின் உள்நாட்டு இன்ஸ்டண்ட் மெசேஜ் செயலியான அரட்டை (Arattai), விரைவில் ஜோஹோ பே (Zoho Pay) உடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும், இது ஜோஹோவின் பேமெண்ட் முறையை மேலும் வலுப்படுத்தும் என்று கூறினார்.

ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஜோஹோ

ஜோஹோ பே: கடந்த ஆண்டு, ஜோஹோ ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண ஒருங்கிணைப்பாளராக (Payment Aggregator) என மாறியது. அதன் ஆன்லைன் பணம் செலுத்தும் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. புதிய POS சாதனங்கள் வணிகர்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், UPI மற்றும் மொபைல் வாலட்கள் மூலம் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த அனுமதிக்கும் என்று தெரிவித்தார்.

பாரத் பில்பேயுடன் ஜோஹோ

NPCI NBBL உடன் கூட்டணி: உலகளாவிய நிதி தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பேமெண்டுகளில் ஜோஹோவின் வளரும் நம்பகத்தன்மையை எடுத்துக்காட்டிய வேம்பு, நிஜ உலக வணிக சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் இந்தியாவின் கட்டண உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நிறுவனம் NPCI NBBL (National Payments Corporation of India's New Bharat BillPay Limited) உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்று கூறினார்.

பதிவிறக்கம் உச்சியில் அரட்டை

தற்போதைய நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 7.5 மில்லியன் (75 லட்சம்) பதிவிறக்கங்களை எட்டியுள்ளது. இது சமீபத்திய காலங்களில் ஒரு உள்ளூர் செயலிகளில் அதிக பதிவிறக்கம் கொண்ட செயலியின் சாதனையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதில் ஒன்று அரட்டையாகும்.

அரட்டையின் வளர்ச்சி

அமைச்சர்கள், நிறுவனர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் உட்பட பலரிடமிருந்து "மேட்-இன்-இந்தியா" செய்தியிடல் செயலியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, உழைப்பின் கடுமையில் இருந்த ஜோஹோவின் அரட்டைக்கு இது அசுர வளர்ச்சிக்கான பாதையாக அமைந்தது.

அரட்டை டிராபிக்

ஸ்ரீதர் வேம்பு கூறுகையில் 3 நாட்களில் அரட்டை டிராபிக் 100 மடங்கு அதிகரிப்பை நாங்கள் சந்தித்துள்ளோம். புதிய பதிவுகள் ஒரு நாளைக்கு 3,000 இலிருந்து 3.5 லட்சமாக உயர்ந்துள்ளன என்று கூறியுள்ளார். மேலும் ஒரு 100 மடங்கு அதிகரிப்பைக் கையாள ஜோஹோ அவசர அடிப்படையில் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 3, 2025 நிலவரப்படி, கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் உட்பட, அரட்டை ஒட்டுமொத்தமாக 7.5 மில்லியன் டவுன்லோடுகளை பெற்று, 7.5 மில்லியன் கணக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : ஜோஹோ இமெயிலுக்கு மாறிய அமித்ஷா - டிரெண்டுக்கு நீங்களும் மாறுங்க!

ஸ்ரீதர் வேம்புவின் கருத்து

ஜோஹோ இன்னும் நிறைய உள்கட்டமைப்பைச் சேர்க்கும்போது, ​​சிக்கல்கள் எழும்போது அவற்றைச் சரிசெய்ய கோடிங்- களை மேம்படுத்தி வருவதாகவும், நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் என்று வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஜோஹோவின் இந்த புதிய POS சாதனங்கள் மற்றும் அரட்டை செயலியுடன் ஜோஹோ பே ஒருங்கிணைப்பு ஆகியவை இந்திய டிஜிட்டல் கட்டணச் சந்தையில் ஒரு புதிய சக்திவாய்ந்த போட்டியாளராக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வணிகர்களுக்கும் நுகர்வோருக்கும் புதிய வசதிகளையும் தேர்வுகளையும் வழங்கும். மேட்-இன்-இந்தியா தயாரிப்புகளுக்கான இந்த வளர்ச்சி, டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பாதையை வகுத்து, இந்தியாவை நல்லதொரு பொருளாதாரத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in